Post Office Scheme: வேகமாக பணம் இரட்டிப்பாகும், ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டம்

Kisan Vikas Patra: தபால் அலுவலக திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் ஆகும். இந்தத் திட்டங்கள் பாரம்பரிய முதலீடுகளை விரும்புபவர்கள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்பவர்களுக்கானது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 19, 2022, 11:50 AM IST
  • இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
  • குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழை வாங்கலாம்.
  • அதாவது இந்தத் திட்டத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
Post Office Scheme: வேகமாக பணம் இரட்டிப்பாகும், ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டம் title=

தபால் அலுவலகத் திட்டம்: முதலீடு என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்றாகும். பாதுகாப்பான முதலீட்டின் மூலம், உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். தற்போது, ​​ரிஸ்க் திறனுக்கு ஏற்ப, நாம் முதலீடு செய்யக்கூடிய பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அதிக ரிஸ்க் எடுக்க ஒரு முதலீட்டாளர் தயாராக இருந்தால், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.  பாதுகாப்பான மற்றும் பூஜ்ஜிய அபாய முதலீட்டை விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (கிசான் விகாஸ் பத்ரா) சிறந்த தேர்வாக இருக்கும்.

தபால் அலுவலகம் ஒரு நீண்ட கால முதலீடு

தபால் அலுவலக திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் ஆகும். இந்தத் திட்டங்கள் பாரம்பரிய முதலீடுகளை விரும்புபவர்கள் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்பவர்களுக்கானது. தபால் அலுவலக திட்டங்களில் அரசாங்க உத்திரவாதம் கிடைக்கிறது. அதாவது இதில் எந்த ஆபத்தும் இல்லை. மேலும் முதலீட்டுக்கு உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும். சிறப்பான அஞ்சல் அலுவலக திட்டமான கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

கிசான் விகாஸ் பத்ர திட்டம் (KVP) என்றால் என்ன

இத்திட்டத்தின் காலம் 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் 1 ஏப்ரல் 2022 முதல் ஜூன் 30, 2022 வரை முதலீடு செய்திருந்தால், நீங்கள் டெபாசிட் செய்த மொத்தத் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும்.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழை வாங்கலாம். அதாவது இந்தத் திட்டத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 1988 இல் தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் விவசாயிகளின் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாகும். ஆனால் இப்போது இது அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தாம்பரம் to திருநெல்வேலி; தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

தேவையான ஆவணங்கள்

- இந்த முதலீட்டுக்கு வரம்பு இல்லாததால், பணமோசடி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 2014ல், 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய, பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டது.

- 10 லட்சம் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்தால், வருமானச் சான்றுகளான ஐடிஆர், சம்பள சீட்டு மற்றும் வங்கி அறிக்கை போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

- இது தவிர, ஆதார் அடையாள அட்டையாகவும் வழங்கப்பட வேண்டும்.

இதை எப்படி பெறுவது? 

1. சிங்கிள் ஹோல்டர் வகைச் சான்றிதழ்: இந்த வகைச் சான்றிதழ் சுயமாகவோ அல்லது குழந்தைகளுக்காகவோ வாங்கப்படுகிறது.

2. ஜாயிண்ட் ஏ கணக்குச் சான்றிதழ்: இது இரண்டு பெரியவர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. திட்டம் நிறைவுபெற்றவுடன், கணக்கில் இருக்கும் இருவருக்கும், அல்லது உயிரோடு இருக்கும் நபருக்கு தொகை செலுத்தப்படும்.

3. ஜாயிண்ட் பி கணக்குச் சான்றிதழ்: இது இரண்டு பெரியவர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. திட்டம் நிறைவுபெற்றவுடன், கணக்கில் இருக்கும் ஒருவருக்கோ, அல்லது, உயிரோடு இருக்கும் நபருக்கு தொகை செலுத்தப்படும்.

கிசான் விகாஸ் பத்ரவின் அம்சங்கள்

1. இந்தத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கிறது. இதற்கும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே இது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு வழியாகும். திட்டக் காலத்தின் முடிவில் முழுத் தொகையையும் பெறுவீர்கள்

2. இதில், வருமான வரி 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்காது. இதன் மீதான வருமானம் முழுமையாக வரிக்கு உட்பட்டது. மெச்யூரிட்டிக்குப் பிறகு பணத்தை திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படாது

3. நீங்கள் மெச்யூரிட்டி காலத்தில் அதாவது 124 மாதங்களுக்குப் பிறகு தொகையை திரும்பப் பெறலாம். ஆனால் அதன் லாக்-இன் காலம் 30 மாதங்களாகும். இதற்கு முன் நீங்கள் திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டாலோ அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தாலோ இது மாறும். 

4. இதில் 1000, 5000, 10000, 50000 ஆகிய மதிப்புகளில் முதலீடு செய்யலாம்.

5. கிசான் விகாஸ் பத்ராவை அடமானமாகவோ அல்லது பத்திரமாகவோ வைத்துக் கொண்டு கடன் வாங்கலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News