EPFO Higher Pension: நல்ல செய்தி பிஎஃப் சந்தாதாரர்களே!! வந்துவிட்டது FAQ, கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்

EPFO Higher Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), உயர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு, அதன் அனைத்து பிரிவுகளுக்கும் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2023, 11:25 AM IST
  • EPFO உயர் ஓய்வூதியம் தொடர்பான FAQ வெளியானது.
  • சுமார் ஒரு ஆண்டு முன்னர் இதற்கான தீர்ப்பு வெளிவதது.
  • FAQ மூலம் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
EPFO Higher Pension: நல்ல செய்தி பிஎஃப் சந்தாதாரர்களே!! வந்துவிட்டது FAQ, கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் title=

EPFO Higher Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), உயர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு, அதன் அனைத்து பிரிவுகளுக்கும் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) வெளியிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகள் இந்த விஷயத்தில் சரியான தெளிவு வேண்டும் என்று இபிஃப்ஓ (EPFO) இடம் தொடர்ந்து கேட்டுவந்தனர். குறிப்பாக அதிக ஊதியத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் கோரும் கூட்டு விருப்பங்களை சரிபார்க்கும் போது ஒரு பணியாளரின் பதிவுகளை அணுகுவது தோடர்பான செயல்முறை குறித்து பல கேள்விகள் இருந்தன.

பிராந்திய பிஎஃப் கமிஷனர் (ஓய்வூதியம்) அபராஜிதா ஜக்கி தயாரித்த FAQ ஆவணம், நவம்பர் 4, 2022 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்த ஒன்பது கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

FAQ ஆவணம் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என்று EPFO கூறுகிறது. ஆனால் EPFO இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) உறுப்பினர்கள் பல மாதங்களாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்பைக் கோரி வருவதாகக் கூறினர்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளான FAQ -வை வெளியிட்டதற்காக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு நன்றி தெரிவித்து, முதலாளிகளின் பிரதிநிதியாக பேசிய CBT உறுப்பினர் கே.இ. ரகுநாதன், இந்த FAQ தொகுப்பு ஓய்வூதியம் பெறுவோருக்கு உள்ள குழப்பங்காளை தீர்க்கும் பதில்களை அளிக்கின்றது என்றார். "இது சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தால், ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) மற்றும் EPFO அதிகாரிகளிடையே குழப்பத்தை இது அப்போதே தெளிவுபடுத்தியிருக்கும்" என்று யாதவ் கூறினார்.

CBT யில் உள்ள தொழிலாளர் பிரதிநிதி ஏ.கே. பத்மநாபன், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் வெளியிடப்படிருப்பதை வரவேற்றார். “இறுதியாக, EPFO அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளான FAQ -வை வெளியிட்டுள்ளது. ஆனால், 'எந்த தேதியிலிருந்து விண்ணப்பதாரர்கள் அதிக ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்' என்ற, பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்கு இன்னும் EPFO ஆல் பதிலளிக்கப்படவில்லை" என்று திரு பத்மநாபன் கூறினார்.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்: பழைய ஓய்வூதியம் பாரத்தை அதிகரிக்கும்... எச்சரித்த RBI

கூட்டு விருப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணச் சான்றுகளில், பின்வருபவை இருக்க வேண்டும் என EPFO தெளிவுபடுத்தியுள்ளது.

- நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ மாத ஊதிய உச்சவரம்பான ரூ.5,000 / ரூ.6,500 / ரூ.15,000 ஐத் தாண்டி, ஊழியர்களின் ஊதியத்துடன் பிஎஃப் பங்களிப்பில் முதலாளியின் பங்கின் விவரங்கள் இருக்க வேண்டும். 

- முதலாளி செலுத்த வேண்டிய நிர்வாகக் கட்டணங்கள் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ்

- ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு ஏற்ப, பெறப்பட்ட பங்களிப்பின் அடிப்படையில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் (PF Account),   வட்டித் தொகை சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம். 

சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் முதலாளிகள் / நிறுவனங்களிடமிருந்து சேகரிப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை என்றும் FAQ -வில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் தொடங்கும் தேதி, ஓய்வூதிய சேவை, ஓய்வூதியம் பெறத்தக்க சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான பொருந்தக்கூடிய சூத்திரத்தை நிர்ணயிக்கும் என்று FAQ -வில் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதியில் இருந்து வெளியேறும் தேதிக்கு முந்தைய 60 மாத கால இடைவெளியில் பணிபுரிந்த காலத்தில் பெறப்பட்ட சராசரி மாத ஊதியத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரரின் ஓய்வூதிய ஊதியம் கணக்கிடப்படும்.

எனினும், சந்தாதாரர்களின் முந்தைய கட்டணப் பதிவுகளின் விவரங்களைப் பகிர்வது குறித்து FAQ -வில் எதுவும் கூறப்படவில்லை. ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இரு சாராரும் இந்த விஷயத்தில் தெளிவு வேண்டும் என கோரி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News