மாதம் ரூ. 1500 டெபாசிட் செய்தால் ரூ. 35 லட்சம் வரை வருமானம் வரும்... அதுவும் ரிஸ்க் இல்லாமல்!

Post Office Scheme: தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 35 லட்சம் வரை வருமானம் பெறலாம். அந்த திட்டம் என்ன என்றும், அதுகுறித்த முழு விவரத்தையும் இதில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2023, 05:14 PM IST
  • தபால் அலுவலகம், வங்கிகளின் FD திட்டங்கள் இன்னும் முதலீட்டுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.
  • இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • நீங்கள் குறைந்த ரிஸ்க் உடன் நல்ல வருமானத்தைப் பெறலாம்.
மாதம் ரூ. 1500 டெபாசிட் செய்தால் ரூ. 35 லட்சம் வரை வருமானம் வரும்... அதுவும் ரிஸ்க் இல்லாமல்! title=

Post Office Scheme Updates: தபால் அலுவலகம் வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் நீங்கள் லட்சக்கணக்கில் பலன் பெறலாம். அத்தகைய அரசாங்கத் திட்டத்தைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம். 

அந்த திட்டத்தின் மூலம், அரசாங்கத்திடம் இருந்து முழுமையாக நீங்கள் 35 லட்சம் ரூபாயைப் பெறலாம். நீங்களும் பெரியளவில் ரிஸ்க் இல்லாமல் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், இது உங்களுக்கான சிறந்த திட்டமாகும். தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளின் FD திட்டங்கள் இன்னும் முதலீட்டுக்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.

திட்டத்தின் பெயர் என்ன?

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தின் பெயர் கிராம் சுரக்ஷா யோஜனா. இதில் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து முழுமையாக 35 லட்சம் ரூபாயைப் பெறுவீர்கள். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்காக இந்திய தபால் மூலம் தொடங்கப்பட்டது. இதில் நீங்கள் குறைந்த அபாயத்துடன் நல்ல வருமானத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | SSY Scheme: பெண் குழந்தைகளுக்கான அரசின் சிறந்த முதலீடு திட்டம்! முழு விவரம்!

35 லட்சம் வரை பலன் கிடைக்கும்

இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால், வருங்காலத்தில் ரூ.31 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பலன் கிடைக்கும். ஒருவர் 19 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து ரூ. 10 லட்சம் பாலிசியை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம், பிறகு அவருடைய மாதாந்திர பிரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ.1515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு ரூ.1463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1411 ஆகவும் இருக்கும். பாலிசி வாங்குபவர் முதிர்ச்சியின் போது 55 ஆண்டுகளுக்கு ரூ.31.60 லட்சமும், 58 ஆண்டுகளுக்கு ரூ.33.40 லட்சமும், 60 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.

முதலீட்டு விதிகளை அறிந்து கொள்ளுங்கள்

19 முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம். இந்தத் திட்டத்திற்கான பிரீமியம் கட்டணம் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கணக்கில் செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் கடனும் பெறலாம். இந்தத் திட்டத்தை எடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் இதை சரண்டர் செய்யலாம். 

இந்த காப்பீடு திட்டம் ஒருபுறம் இருக்க, தபால் அலுவலகத்தின் மற்றொரு சிறந்த திட்டங்களில் ஒன்று, தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். தபால் அலுவலக தேசிய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் (MIS) 1000 ரூபாயில் கூட உங்கள் கணக்கைத் திறக்கலாம். தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். 

மேலும் படிக்க | சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரம் இயங்கும் தபால் நிலையம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News