இன்னும் உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? மாற்றுவது எப்படி?

Rs 2,000 note exchange: ரூ.2,000 நோட்டுகளின் புழக்கத்தை ஆர்பிஐ நிறுத்துள்ளது.  இன்னும் இந்த நோட்டுகளை நீங்கள் வைத்து இருந்தால், சில வழிகளின் மூலம் மாற்றி கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2024, 01:53 PM IST
  • கடந்த ஆண்டு 2000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது.
  • 98 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
  • தபால் அலுவலகம் மூலம் மாற்றி கொள்ள முடியும்.
இன்னும் உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? மாற்றுவது எப்படி? title=

Rs 2,000 note exchange: கடந்த 2016ல் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,0000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அரசாங்கத்தின் இந்த முடிவை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ரூ.2,000 மதிப்புள்ள புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கடந்த மே 19ம் தேதி அவற்றை தடை செய்தது. 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.  ரூ.2,000 நோட்டுகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.  இந்த நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்களும் நிறுவனங்களும், செப்டம்பர் 30, 2023க்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவோ முதலில் கூறப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.  

மேலும் படிக்க | Budget 2024: வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ், வட்டியில் ₹ 5 லட்சம் வரை வரிவிலக்கு!!

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி இந்த காலக்கெடுவை அக்டோபர் 7, 2023 வரை நீட்டித்தது. இந்த தேதிக்குப் பிறகு, வங்கிக் கிளைகளில் டெபாசிட் மற்றும் பரிமாற்றச் சேவைகள் நிறுத்தப்பட்டன. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், அவை தொடர்ந்து செல்லத்தக்கவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 97.38 சதவீத நோட்டுகள் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19, 2023 அன்று சந்தையில் மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், டிசம்பர் 29, 2023 அன்று இந்த எண்ணிக்கை ரூ.9,330 கோடியாகக் குறைந்துள்ளது. இதன்படி டிசம்பர் இறுதி வரையிலும் 2.62 சதவீத நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இன்னும் இந்த நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு, ரிசர்வ் வங்கி பல வழிகளில் சமர்ப்பித்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.  

ரிசர்வ் வங்கியில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்

ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் நேரடியாக மாற்றி கொள்ள முடியும். தனிநபர்கள் தங்களின் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ள இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் மாற்ற முடியும். இந்த அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, புது தில்லி, மும்பை மற்றும் பிற முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன.

இந்திய அஞ்சல் மூலம் மாற்ற முடியும்.  பொதுமக்களுக்கான கூடுதல் வசதிக்காக, இந்திய அஞ்சல் சேவைகளையும் மக்கள் பயன்படுத்த RBI அனுமதித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை அனைத்து தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகத்திற்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்க அனுப்பலாம். மேலும் அக்டோபர் 8, 2023 முதல் தனிநபர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு சமமான தொகையை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில், நேரடி பரிமாற்றத்திற்குப் பதிலாக வரவு வைக்கும் விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | MNREGA திட்டம்... இனி சம்பளம் பெற ஆதார் அவசியம்... மத்திய அரசு உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News