சாண்ட்விச்சில் காணப்பட்ட புழு.... இண்டிகோ விமான நிறுவத்திற்கு FSSAI நோட்டீஸ்!

பெண் பயணி ஒருவர், இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் உள்ள பூச்சிகளின் சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு, விமான நிறுவனம் வழங்கும் உணவின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 4, 2024, 09:06 AM IST
  • சாண்ட்விச்சின் சேவையை நிறுத்தியதாக IndiGo நிறுவனம் தகவல்.
  • சாண்ட்விச்சில் உள்ள பூச்சிகளை காட்டும் சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பயணி.
  • உணவியல் நிபுணர் ஒருவரின் புகாரின் பேரில் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்.
சாண்ட்விச்சில் காணப்பட்ட புழு.... இண்டிகோ விமான நிறுவத்திற்கு FSSAI நோட்டீஸ்! title=

உள்நாட்டு விமான நிறுவனமான IndiGo விமானத்தில் பரிமாறப்படும் உணவில் பூச்சிகள் இருப்பது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, FSSAI, இண்டிகோ விமான நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வழங்கப்பட்ட உணவுப் பொருள் தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ANI செய்திகளின்படி, IndiGo புதனன்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் இருந்து மும்பைக்கு 6E 6107 என்ற விமானத்தில் பரிமாறப்பட்ட உணவுப் பொருள் தொடர்பாக FSSAI என்னும் உணவுப்பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து எங்களுக்கு காரணம் கேட்டு, ஷோ காஸ் நோட்டீஸ் வந்துள்ளது என்று கூறியுள்ளது. நெறிமுறையின்படி நோட்டீசுக்கு பதிலளிப்போம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் பயணி அளித்த புகார்

டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் ஒருவரின் புகாரின் பேரில் விமான நிறுவனத்திற்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 29-ம் தேதி டெல்லியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தின் போது இண்டிகோ ஊழியர்கள் வழங்கிய சாண்ட்விச் ஒன்றில் புழுக்கள் இருப்பதாக பெண் பயணி குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் 6E 6107 இல் நடந்தது. குஷ்பூ குப்தா என்ற பெண் பயணி, விமானத்தில் சாண்ட்விச்சில் உள்ள பூச்சிகளை காட்டும் சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விமான நிறுவனம் வழங்கும் உணவின் தரம் குறித்து பெண்கள் கேள்வி எழுப்பினர். தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழுக்கள் இருப்பதைப் பற்றி விமானத்தின் கேபின் குழுவினருக்குத் தெரிவித்த போதிலும், அவர்கள் மற்ற பயணிகளுக்கு சாண்ட்விச்களை விநியோகிப்பதைத் தொடர்ந்ததாகவும் அந்தப் பெண் கூறினார். விமான ஊழியர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, யாருக்காவது தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் எனவும் கேள்விகள் எழுப்பபட்டன.

 

 

இண்டிகோ அளித்த பதில்

வீடியோ வைரலாக பரவியவுடன் மன்னிப்பு கேட்ட இண்டிகோ விமான நிறுவனம் (IndiGo Airlines), இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து வருவதாக கூறியுள்ளது. டெல்லியில் இருந்து மும்பைக்கு 6E 6107 விமானத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து அதன் வாடிக்கையாளர் ஒருவர் எழுப்பிய புகாரை விமான நிறுவனம் அறிந்திருப்பதாக இண்டிகோ செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. விமானத்தில் உணவு மற்றும் பான சேவையின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதில் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் என்று விமான நிறுவனம் கூறியது. 

மேலும் படிக்க | பணத் தட்டுப்பாடு என்பதே இல்லாமல் இருக்க... புத்தாண்டில் எடுக்க வேண்டிய 12 தீர்மானங்கள்!

சாண்ட்விச் வழங்கும் சேவையை  நிறுத்திய IndiGo

விசாரணையில், எங்கள் குழுவினர் உடனடியாக குறிப்பிட்ட சாண்ட்விச்சின் சேவையை நிறுத்தியதாக IndiGo கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது. சரியான திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் உணவு சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பயணிகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க | பரஸ்பர நிதியம்.... 5000 ரூபாயை 1 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News