Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு... மாதா மாதம் அசத்தலான வருமானம்

Post Office Scheme: பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபரா நீங்ககள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 26, 2023, 11:10 PM IST
  • MIS இல், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம்.
  • இந்தக் கணக்கிலிருந்து பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
  • MIS கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றவும் முடியும்.
Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு... மாதா மாதம் அசத்தலான வருமானம் title=

தபால் அலுவலகத் திட்டம்: சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்கலாம். இவற்றில் பணத்தை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் உத்தரவாதமான வருமானம் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபராக நீங்களும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 

பாதுகாப்பான வருமானம் அளிக்கும் ஒரு பயனுள்ள அஞ்சல் அலுவலக திட்டம் ஒன்று உள்ளது. தபால் அலுவலகத்தின் இந்த அருமையான திட்டம் மாதாந்திர வருமானத் திட்டம் ( Post Office MIS) ஆகும். இதில் மொத்தத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்திய பின்னர், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீட்டில் சந்தை ஏற்ற இறக்கங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். எம்ஐஎஸ் கணக்கில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும்.

1,000 ரூபாயில் கணக்கு தொடங்கலாம்

தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், 1,000 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். ஒற்றை (சிங்கிள்) மற்றும் கூட்டு கணக்குகள் (ஜாயிண்ட் அகவுன்ட்) இரண்டையும் இதில் திறக்கலாம். சிங்கிள் அகவுண்டில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். தபால் அலுவலகத்தின்படி, கணக்கு தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்ததிலிருந்து முதிர்வு வரை ஒவ்வொரு மாதமும் MIS இல் வட்டி செலுத்தப்படுகிறது. எந்தவொரு இந்திய குடிமகனும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் ஜூலை 1, 2023 முதல் 7.4 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது.

5 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுக்கலாம்

அஞ்சல் அலுவலக எம்ஐஎஸ் (Post Office MIS) இன் முதிர்வு ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த முதிர்வு காலம் (Maturity Peroid) முடியும் முன்னரும் இந்த கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இருப்பினும், டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே நீங்கள் பணத்தை எடுக்க முடியும். விதிகளின்படி, ஓராண்டு முதல் மூன்றாண்டுகளுக்குள் பணம் எடுக்கப்பட்டால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும். கணக்கு துவங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுக்கு முன் பணத்தை எடுத்தால், உங்கள் வைப்புத்தொகையில் 1% கழிக்கப்பட்டு திருப்பித் தரப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: MTNL BSNL ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... ஓய்வூதியத்தில் பம்பர் ஏற்றம், வந்தது தீர்ப்பு

POMIS: சில முக்கிய விதிகள்

- MIS இல், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கிலிருந்து பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.

- கூட்டுக் கணக்கை எந்த நேரத்திலும் ஒற்றைக் கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கை கூட்டுக் கணக்காகவும் மாற்றலாம். கணக்கில்  மாற்றங்களை செய்ய, அனைத்து கணக்கு உறுப்பினர்களும் ஒரு கூட்டு விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.

-MIS கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றவும் முடியும்.

- முதிர்வு காலம் முடிவடைந்ததும், அதாவது ஐந்து ஆண்டுகள் ஆனதும், அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். எம்ஐஎஸ் கணக்கில் நாமினேஷன் வசதி உள்ளது.

இந்தியா போஸ்ட்

இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | ஏலம் போகும் மோசடி மன்னர்களின் சொத்துகள்! நீரவ் மோடியின் வீட்டின் விலை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News