பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு போஸ்ட் ஆபிசின் அசத்தல் திட்டம்! முழு விவரம்!

அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள சுகன்யா சம்ரித்தி திட்டம் 100% ஆபத்து இல்லாதது மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் வருமான வரியைச் சேமிக்கலாம்.    

Written by - RK Spark | Last Updated : Nov 7, 2022, 10:49 AM IST
  • இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வெறும் 250 ரூபாய் முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம்.
  • பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் 10 வயதுக்குட்பட்ட மைனர் பெண்ணின் கணக்கைத் திறக்கலாம்.
  • உங்கள் மகளுக்கு 18 வயதாகும்போது, ​​தொகையை திரும்பப் பெறலாம்.
பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு போஸ்ட் ஆபிசின் அசத்தல் திட்டம்! முழு விவரம்! title=

பெண் பிள்ளைகளை பெற்றாலே அவர்களின் எதிர்காலத்திற்கென நாம் பணத்தை சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.  பணத்தை நாம் வீட்டிலேயே சேமித்து வைத்திருந்தால் எவ்வளவு சேமிக்கிறோமோ அந்த தொகை மட்டும் தான் நமக்கு கிடைக்கும் அதுவே ஏதேனும் முதலீட்டு திட்டங்களில் சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்தால் வட்டியுடன் சேர்த்து நமக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.  இதற்கென தபால் அலுவலகம் வழங்கும் சுகன்யா சம்ரித்தி திட்டம் உள்ளது, இதில் சிறியளவில் சேமிப்பை தொடங்கி பெரியளவில் லாபத்தை பெறலாம்.  பெண் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு இந்தத் திட்டம் 2014-ம் ஆண்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது, இது 100% ஆபத்து இல்லாதது மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் வருமான வரியைச் சேமிக்கலாம்.  இந்த திட்டத்தில் முழுமையான விவரத்தை பின்வருமாறு காண்போம்.  

மேலும் படிக்க | PF balance சரிபார்ப்பு: இபிஎஃப் இருப்பு அறிய படிப்படியான வழிகாட்டுதல்

முதலீட்டு விவரம் :

சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு வெறும் ரூ.250 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம்.  ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கணக்கில் செலுத்தக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சம் ஆகும்.  திட்டத்தின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் உங்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

வட்டி விகிதம் :

சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் உங்கள் முதலீட்டிற்கு 7.6% வருமானம் கிடைக்கிறது, இருப்பினும் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுகிறது.  இதன் காரணமாக வட்டி ஏற்ற இறக்கமாக இருக்கும் ஆனால்  7%க்கு கீழ் குறையாது.

கணக்கு தொடங்கும் செயல்முறை :

உங்கள் பெண் குழந்தை  10 வயதுக்குட்பட்ட மைனர் பெண்ணாக இருக்கும்பட்சத்தில் குழந்தையின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம்.  கணக்கு உங்கள் மகளின் பெயருடன் திறக்கப்பட வேண்டும், ஒரே வீட்டிற்கு இரண்டு மகள்களுக்கு திறக்கலாம்.  

பணத்தை எடுக்கும் விவரம் :

உங்கள் மகளுக்கு 18 வயதாகும்போது, ​​கணக்கில் சேமிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறலாம்.  18 வயதாவதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  21 வயதை அடையும் போது கணக்கு முதிர்ச்சியடைகிறது, அதுவே எதிர்பாராதவிதமாக கணக்கின் முதிர்ச்சிக்கு முன் உங்கள் மகள் இறந்துவிட்டால் கணக்கு மூடப்பட்டு மொத்த தொகையானது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும் படிக்க | ஆதார் கார்டில் உடனே இதைச் செய்யுங்கள், இல்லையெனில் சிக்கல் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News