குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மாதம் ரூ.2500 வருமானம்!

10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யும்போது தற்போதைய 6.6 சதவீத வட்டி விகிதத்துடன் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.1100 வட்டி கிடைக்கும்.   

Written by - RK Spark | Last Updated : Sep 23, 2022, 06:20 AM IST
  • போஸ்ட் ஆபிசில் சிறப்பான திட்டங்களில் ஒன்று எம்ஐஎஸ் திட்டம் ஆகும்.
  • 10 வயதுக்குமேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கணக்கை தொடங்கி கொள்ளலாம்.
  • வேண்டிய பணத்தை நாம் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மாதம் ரூ.2500 வருமானம்! title=

மற்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை காட்டிலும் அரசுக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபிசில் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது எப்போதும் பாதுகாப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.  அப்படி போஸ்ட் ஆபிசில் சிறப்பான திட்டங்களில் நாம் பார்க்கப்போகும் ஒரு திட்டம் தான் எம்ஐஎஸ் திட்டம், இது ஒரு சிறந்த வருமானத்தை தரும் சேமிப்புத் திட்டமாகும்.  இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் மாதம் ஒரு முறை வீதம் ஒவ்வொரு மாதமும் பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி கொள்ளலாம்.  உங்கள் வீட்டில் 10 வயதுக்குமேற்பட்ட குழந்தைகள் இருந்தால் இந்த திட்டத்தில் அவர்களது பெயரில் கணக்கை நீங்கள் தொடங்கி கொள்ளலாம்.

மேலும் படிக்க | Flipkart Big Billion Days sale: Poco ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி 

அப்படி 10 வயதுக்குமேற்பட்ட குழந்தைகளின் பெயரில் நீங்கள் கணக்கை தொடங்கி முறையாக டெபாசிட் செய்து வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர்களின் கல்வி செலவுகள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை.  எந்த போஸ்ட் ஆபீஸிலும் இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கை தொடங்க முடியும், இந்த எம்ஐஎஸ் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ள முடியும்.  இந்த திட்டத்தில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் பங்களிக்க வேண்டும் மற்றும் தற்போது இந்த திட்டத்தில் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கிடைக்கும் வட்டி விகிதம் 6.6 சதவீதம் ஆகும்.

உங்கள் குழந்தைக்கு 10 வயதாக இருக்கும்போது அவர்களது பெயரில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யும்போது தற்போதைய 6.6 சதவீத வட்டி விகிதத்துடன் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.1100 வட்டி சேரும்.  இந்த திட்டத்தின் முதிர்வில் அதாவது ஐந்து ஆண்டுகள் கழித்து உங்களுக்கு ரூ.2 லட்சம் அசல் தொகையுடன் சேர்த்து மொத்தமாக வட்டி ரூ.66,000 கிடைக்கும்.  குழந்தைகளுக்கு மாதந்தோறும் கிடைக்கும் இந்த ரூ.1100 தொகையை அவர்களின் கல்வி தேவைகளுக்கு நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.  அதேசமயம் நீங்கள் குழந்தைகளின் பெயரில் ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் 2500 ரூபாய் கிடைக்கும்.

மேலும் படிக்க | IRCTC: திருவிழாவுக்கு ஊருக்கு போக ஈஸியா ரயில் டிக்கெட் புக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News