Post Office Schemes: போஸ்ட் ஆபிஸ் மூலம் மாத வருமானம் பெரும் சிறப்பான திட்டங்கள்!

Post Office Saving Schemes: தபால் அலுவலகங்கள் மக்களுக்கு வழங்கி வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகும்.    

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 06:06 AM IST
  • தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்துவிடும்.
  • பிஓஎம்ஐஎஸ் திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு பணத்தை நீங்கள் திரும்பப் பெற்று கொள்ளலாம்.
  • பிஓஎம்ஐஎஸ் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டியினை தபால் அலுவலகம் வழங்குகிறது.
Post Office Schemes: போஸ்ட் ஆபிஸ் மூலம் மாத வருமானம் பெரும் சிறப்பான திட்டங்கள்! title=

Post Office Saving Schemes: வங்கிகள் எப்படி தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பலவகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறதோ, அதைபோலவே மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்களும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.  தபால் அலுவலகங்கள் மக்களுக்கு வழங்கி வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகும்.  இந்த திட்டத்தில் பங்களிப்பதன் மூலம், உங்களுக்கான வழக்கமான வருமானத்தை நீங்கள் எவ்வித தடையுமில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.  நிலையான வருமானத்தை பெற வேண்டுமென்றால் நீங்கள் ஒரு நிலையான தொகையை தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.  அப்படி டெபாசிட் செய்வதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவத்தில் வருமானம் கிடைக்கப்பெறும்.  

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜாக்பார்ட் செய்தி! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்துவிடும், ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெற்று கொள்ளலாம்.  அதாவது தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை நீங்கள் வருமானமாக பெற்று பயனடையலாம்.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான டெபாசிட் வரம்பை அரசாங்கம் ரூ.9 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது.  அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.  தற்போது தபால் அலுவலகம் வழங்கும் இந்த பிஓஎம்ஐஎஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களின் பணத்திற்கு 7.4 சதவீத வட்டியினை தபால் அலுவலகம் வழங்குகிறது.  ஸ்லாப் விகிதத்தின்படி இந்தத் திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வரி பொருந்தும்.  இந்தியாவிலுள்ள மூத்த குடிமக்களுக்கு சிறந்த வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒன்றாக இந்த தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) விளங்குகிறது.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கால்குலேட்டரின் படி, ரூ.2 லட்சத்தை இந்த பிஓஎம்ஐஎஸ் திட்டத்தில் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.73,980 வட்டி கிடைக்கும்.  இதனை 60 மாதங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு மாதமும் பெறப்படும் தொகை வரும், அதாவது இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகள் வீதம் ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1,233 கிடைக்கும்.  அதுவே இந்த தபால் அலுவலக திட்டத்தில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,11,000 வட்டியாக கிடைக்கும்.  மேலும் ரூ.3 லட்சம் டெபாசிட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,850 வருமானமாக கிடைக்கும்.  இத்திட்டத்தில் ரூ.4 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதலீடு செய்யும் பணத்திற்கு 7.4 சதவீதம் என்கிற வட்டி விகிதத்தில், மொத்தம் ரூ.148,020 வட்டியாகக் கிடைக்கும்.  ரூ.4 லட்சம் டெபாசிட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,467 வட்டியாக பெறலாம். அதுவே ரூ. 5 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீதம் என்ற விகிதத்தில், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.184,980 கிடைக்கும்.  மேலும் இந்த டெபாசிட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 வட்டியாக கிடைக்கும்.

மேலும் படிக்க | RD சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வங்கிகளின் பட்டியல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News