தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! விதிகள் மாற்றம்!

தற்போது கிராமின் டக் சேவா கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நாளில் ரூ.20,000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Oct 2, 2022, 01:53 PM IST
  • தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் 4% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
  • தபால் நிலைய சேமிப்பு கணக்கிலும் ரூ.500 எப்போதும் இருக்க வேண்டும்.
  • இனி ஒரு நாளில் ரூ.20,000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! விதிகள் மாற்றம்! title=

வங்கியில் எப்படி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போமோ அதேபோல அரசுக்கு சொந்தமான தபால் நிலையத்திலும் பலர் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.  தபால் நிலையத்தில் வழங்கப்படும் பல திட்டங்கள் மக்களுக்கு நல்ல பலனை தருவதாக அமைந்திருக்கிறது, தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் 4% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.  தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்தால் போதுமானது, வங்கியில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது போலவே தபால் நிலைய சேமிப்பு கணக்கிலும் ரூ.500  எப்போதும் இருக்க வேண்டும்.  அப்படி மினிமம் பேலன்சை பராமரிக்க நீங்கள் தவறும் பட்சத்தில் உங்களிடம் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.  தற்போது தபால் துறை சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.  

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

இதுகுறித்து கடந்த மாதம் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தபால் அலுவலகத்தின் ஏதேனும் ஒரு கிளையில் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு சரிபார்ப்பு தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.  இது மட்டுமின்றி தபால் துறை அதன் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வரம்பையும் உயர்த்தியுள்ளது.  அதன்படி முன்னர் ஒரு நாளில் ரூ.5000 மட்டுமே பணத்தை எடுத்துள்ள முடியும் என்கிற வரம்பு இருந்த நிலையில் தற்போது கிராமின் டக் சேவா கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நாளில் ரூ.20,000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் ஒரு கணக்கில் ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.  தபால் துறையின் புதிய விதிகளின்படி சேமிப்புக் கணக்கைத் தவிர, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி), சேமிப்புச் சான்றிதழ்களில் தேசிய வைப்புத் திட்டங்கள் (என்எஸ்சி) திட்டங்கள் போன்றவற்றிலிருந்து பணமெடுக்க காசோலை அல்லது படிவத்தை நிரப்பி கொடுப்பதன் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News