5 வருடத்தில் 4 லட்சம் சம்பாதிக்க போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் சூப்பரான திட்டம்

5 வருடத்தில் 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வழிவகை செய்யும் போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டத்தை இங்கே தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2022, 02:28 PM IST
  • முதலீடுக்கு ஏற்ற சூப்பரான திட்டம்
  • 5 ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் கிடைக்கும்
  • அஞ்சலகத்தில் இருக்கும் சேமிப்பு திட்டம்
5 வருடத்தில் 4 லட்சம் சம்பாதிக்க போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் சூப்பரான திட்டம் title=

சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து திட்டமிடுபவர்கள் பெரும்பாலும் ஆபத்து இல்லாத திட்டங்களை தேர்வு செய்வதை விரும்புகின்றனர். ஏனெனில் அந்த திட்டங்கள் மட்டுமே நிலையான மற்றும் வருவாய் சேமிப்பு கொடுப்பதுடன், மூலதனத்துக்கும் உத்திரவாதமாக இருக்கின்றன. அந்தவகையில் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் முதலீடு திட்டங்கள், பலரையும் ஈர்க்கிறது. 

மாதாந்திர வருமானம் வேண்டும் என விரும்பும் மூத்த குடிமக்கள் NSC-ஐப் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எந்தவொரு தனிநபரும் இந்த திட்டத்தில் தனது சொந்த பெயரில் அல்லது சிறார்களின் சார்பாக முதலீடு செய்யலாம். NSC-களை இருவர் கூட்டு அடிப்படையில் அடிப்படையில் கூட வாங்கலாம்.

NSC வட்டி விகிதம்

National Savings Certificate என்பதன் சுருக்கமே என்சிஎஸ் ஆகும். இதன் வட்டிவிகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நடப்பு அக்டோபர்-நவம்பர் காலாண்டில், அரசாங்கம் வழங்கும் விகிதம் 6.8% ஆகும். மேலே உள்ள வட்டி விகிதத்தின் அடிப்படையில், இன்று நீங்கள் ரூ. 1000 மதிப்புள்ள NSC-களை வாங்கினால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதலீடு ரூ.1389 ஆக வளரும். என்எஸ்சியில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லாததால், ஒருவர் எந்த தொகைக்கும் என்எஸ்சியை வாங்கலாம். எனவே, இன்று என்எஸ்சியில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதலீடு ரூ.13.89 லட்சமாக வளரும்.

மேலும் படிக்க | Digital Loan பற்றி ஆர்பிஐ வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

NSC வரி நன்மை

ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ. 1.5 லட்சம் வரை என்எஸ்சியில் முதலீடு செய்யப்படும் தொகை, பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்குக்குத் தகுதி பெறும். NSCயில் ஈட்டப்படும் வட்டி ஒவ்வொரு ஆண்டும் திரட்டப்பட்டு, முதிர்ச்சியின் போது செலுத்தப்படும் என்பதால், வட்டித் தொகை ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் முதலீடு செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு, அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வரி விலக்குக்குத் தகுதி பெறுகிறது. ஆனால், முதிர்ச்சியடையும் போது, ​​என்எஸ்சியில் சம்பாதித்த முழு வட்டிக்கும் வரி விதிக்கப்படும். குறைந்த வருமான வரி வரம்பில் உள்ள முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது. 

என்எஸ்சியில் பணம் எடுத்தல்

NSC முதலீட்டில் நீங்கள் முன்கூட்டியே பணம் எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மூன்று காரணங்களுக்கு மட்டுமே அனுமதி. டெபாசிட் செய்பவர் இறந்தால், நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் அல்லது உறுதிமொழியால் பறிமுதல் செய்யப்பட்டால் மட்டுமே தொகை கொடுக்கப்படும். முதலீடு செய்து ஓராண்டுக்குள் திரும்பப் பெற்றால், முகமதிப்பு மட்டுமே செலுத்தப்படும். ஒரு வருடத்திற்குப் பிறகு, சான்றிதழ்களை வாங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணம் எடுத்தால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்குப் பொருந்தும் எளிய வட்டி விகிதம் செலுத்தப்படும். 

நேஷனல் சேவிங் சர்டிபிகேட் (NSC) என்பது மிகவும் பிரபலமான அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது பிரிவு 80C-ன் கீழ் வரி சலுகைகளுடன் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. நிதித் திட்டமிடுபவர்கள் பெரும்பாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதை ஆபத்து இல்லாதது என முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது மற்ற நிலையான வருவாய் சேமிப்பு திட்டங்களை விட அதிக நிலையான வருவாயை வழங்குவதுடன், மூலதனத்தையும் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News