உத்தரவாத வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்... 1000 ரூபாயில் தொடங்கலாம்!

Post Office Monthly Income Scheme: நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உங்களுக்கு ஒரு சிறந்த வழி.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 16, 2023, 10:18 AM IST
  • தபால் துறையின் இந்த திட்டம் மிகவும் அற்புதமானது.
  • ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள்.
  • உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
உத்தரவாத வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்... 1000 ரூபாயில் தொடங்கலாம்! title=

இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர், தங்கள் செய்துள்ள முதலீடுகளுக்கு குறைந்த வட்டியைப் பெற்றாலும், பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தபால் துறையின் இந்த திட்டம் மிகவும் அற்புதமானது. இந்த திட்டத்தில், பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், வங்கிகளை விட வட்டி விகிதமும் அதிகமாக உள்ளது.

உண்மையில், முதலீட்டாளர்கள் இந்தியாவில் உள்ள தபால் அலுவலகத்துடன் நம்பிக்கையான உறவைக் கொண்டுள்ளனர். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உங்களுக்கு ஒரு சிறந்த வழி. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் பணமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். இந்தத் திட்டம் தேசிய சேமிப்பு மாத வருமானக் கணக்கு (MIS) என்றும் அழைக்கப்படுகிறது.

கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்

ஒரே கணக்கு மூலம் தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் (MIS) குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் அதிகபட்ச பண வரம்பு ரூ.15 லட்சம் வரை. அதாவது கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் மூன்று பேர் முதலீடு செய்யலாம்.

மைனர் பெயரில்  முதலீடு 

இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் மைனர் பெயரில் முதலீடு செய்யலாம், ஆனால் அத்தகைய கணக்கில் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்ய, அஞ்சல் அலுவலகத்தில் தனி POMIS படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், வாடிக்கையாளர் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும்.

மேலும் படிக்க | Business Idea: எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் லட்சங்களை அள்ளலாம்..!

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி

தற்போது, ​​தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (POMIS) 7.4 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. மற்ற நிலையான வைப்பு மற்றும் விருப்பங்களை விட இது சிறந்தது. POMIS படிவத்தை பூர்த்தி செய்யும் போது, ​​உங்களுக்கு அடையாள அட்டை, குடியிருப்பு சான்று, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப்படும். ஒரு நாமினி பெயரும் குறிப்பிடப்பட வேண்டும்.

திட்ட காலம்

தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுத்தால், நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஒரு வருடத்திற்குள் திரும்பப் பெறுவதற்கான விதிமுறை இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் பணம் எடுத்தால் 2% அபராதம் செலுத்த வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் திரும்பப் பெறப்பட்டால், 1 சதவீதம் தொகை கழிக்கப்படும்.

மாதந்திர வருமான சேமிப்பு திட்டத்தின் நன்மைகள்

இந்தக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். 5 வருட முதிர்வு முடிந்த பிறகு, நீங்கள் தொகையை மீண்டும் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நாமினியை குறிப்பிடலாம், இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த தொகையை நாமினி பெற முடியும். எம்ஐஎஸ் திட்டத்தில் டிடிஎஸ் கழிக்கப்படுவதில்லை. ஆனால் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | MSSC Vs SSY: பெண்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News