Shampoo இல்லாமல், இயற்கை முறையில் குளிக்க 5 வழிகள்!

தலைமுடி உதிர்வு என்பது தான் தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பான்மை இளைஞர்களின் பெரிய பிரச்சணையாக உள்ளது!

Last Updated : Feb 18, 2018, 06:44 PM IST
Shampoo இல்லாமல், இயற்கை முறையில் குளிக்க 5 வழிகள்! title=

தலைமுடி உதிர்வு என்பது தான் தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பான்மை இளைஞர்களின் பெரிய பிரச்சணையாக உள்ளது!

ஏன் தலைமுடி உதிர்வு அதிகமாகிறது என பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் பெரும்பாலும் ஒத்துப்போகும் விஷயம் நாம் பயன்படுத்தும் ஷாம்ப்பு தான். 

நாம் உபயோப்படுத்தும் சேம்புகளில் அதிகளவிலான கெமிக்கல் பயன்படுத்தும் பட்சத்தில் அது நம் தலை முடியினை தான் பாதிக்கிறது. ஷேம்ப்பு பயன்படுத்தாமல் குளித்தால் இந்த முடி உதிர்வு பிரச்சனையினை சமாளிக்க முடியுமா? சரி ஷேம்பு இல்லாமல் எப்படி குளிப்பது....

இதோ இருக்கிறது 5 வழிகள்...

1. முல்தானி மட்டி மற்றும் எலுமிச்சை...

முல்தானி மட்டியான பல்வேறு இயற்கை அழகு சாதனங்களுடனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தோல் சார்ந்த அழகு குறிப்புகள் முல்தானி மட்டி இல்லாமல் இடம்பெறாது. ஆனால் இந்த முல்தானி மட்டியானது முடி பிரச்சணைகளுக்கும் தீர்வு அளிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

எலுமிச்சை சாருடன், முல்தானி மட்டி சேர்த்து கசக்கினால் தலை முடியில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு முழுமையாக துலைந்துப் போகும்.

2. சமையல் சோடா...

சமையல் சோடா ஆனது, தலைமுடி பராமரிப்பில் பல வகைகளில் பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவினை ஒரு கோப்பை தண்ணிருடன் சேர்த்து தலைமுடிக்கு மென்மையான முறையில் ஒத்தடம் கொடுக்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கமான முறையில் குளிக்க வேண்டியது தான். இந்த இடத்தில் நீங்கள் ஷைம்ப்பு போன்ற திரவியத்தை தேடமாட்டிற்கள்!

3. செம்பருத்தி இதழ்கள்...

தலைமுடியினை முழுவதுமாக சுத்திகரிக்க செம்பருத்தி பூக்களின் இதழ்கள் மற்றும் இலைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. செம்பருத்தி பூவின் இழத்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து பின்னர் அதனை தலையில் தேய்த்து ஊரவைக்க வேண்டும். பின்னர் இயல்பான முறையில் தங்கள் தலையினை துலக்கவேண்டியது தான். இதேப்போன்று செம்பருத்தி இலையினையும் பயன்படுத்தி பயன்பெரலாம்.

4. கடலை மாவு...

தலை முடிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப் படும் மற்றொரு முறை கடலை மாவு குளியல்... ஒரு தேக்கரண்டி கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கூழ்மமாக்கி பின்னர் அதனை தலையில் தேய்த்து ஊரவைக்க வேண்டும். பின்னர் இயல்பான முறையில் தங்கள் தலையினை துலக்கவேண்டியது தான். 

பெரும்பான்மை மக்கள் இந்த கடலை மாவினை முகத்திற்கும் பயன்படுத்துவது உண்டு. இவ்வாறு செய்வதால் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

5. சோப்புக்காய்...

கிராமப்புரங்களில் கிடைக்கும் இந்த சோப்புக்காயினை பயன்படுத்தி தலை கசக்கினால் எண்ணெய் பிசுபிசுக்கள் அறவே கலைந்துப் போகும். தற்போதைய காலக்கட்டத்தில் இந்த காய் மாரங்கள் கிராமங்களில் கூட அழிந்துகெண்டு வருகிறது.

கார்பரேட் நிறுவனங்கள் பலவும் தயாரித்து விற்பனைப்படுத்தும் சீகைகாய் பொடிகள் பெரும்பாலும் மேற்கூறப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்டே தயாரிக்கப்பட்டு விற்பனைப் படுத்தப் படுகின்றன!

Trending News