Brain Stroke எச்சரிக்கை தேவை: நோய்க்கான காரணம், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் இதோ

குளிர்காலத்தில், பொதுவாக இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் மூளையின் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடுவதால் இரத்த நாளங்கள் சிதைகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2021, 07:18 PM IST
  • மூளை பக்கவாதத்திற்கு அறிகுறிகள் தெரிந்து நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சை தேவைப்படுகிறது.
  • நவீன காலங்களில், நோய்களிலிருந்து விலகி இருக்க யோகா செய்வதையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
Brain Stroke எச்சரிக்கை தேவை: நோய்க்கான காரணம், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் இதோ  title=

மூளை பக்கவாதம் என்பது ஒரு கொடிய நோயாகும். உலகில் ஒவ்வொரு ஆறாவது நபரும் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, மூளை பக்கவாதத்திற்கு அறிகுறிகள் தெரிந்து நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சை தேவைப்படுகிறது. அலட்சியம் செய்தால், அது மிக ஆபத்தானதாகிவிடும். 

மூளை பக்கவாதம் என்றால் என்ன

மூளை (Brain) நரம்புகளில் ஒன்று சிதைந்துவிட்டாலோ அல்லது இரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்பட்டாலோ மூளை பக்கவாதம் ஏற்படும். சில நேரங்களில் இரத்த நாளங்கள் தடைபடும். இதனால் மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும், மூளை திசுக்களில் ஊட்டச்சத்து கூறுகளின் பற்றாக்குறை ஏற்படும். மூளை செல்கள் இறக்கத் தொடங்கும். சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால், மூளை பக்கவாதத்தால், நோயாளி உயிரையும் இழக்க நேரிடும். 
குளிர்காலத்தில், பொதுவாக இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் மூளையின் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைபடுவதால் இரத்த நாளங்கள் சிதைகின்றன.

மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள்

பார்ப்பதில் சிக்கல், பேசுவதிலும் புரிந்து கொள்வதிலும் சிக்கல், மயக்கம், தலைவலி, பலவீனமான உணர்வு, நடப்பதில் கடினம் , வாந்தி சங்கடம் ஆகியவை மூளை பக்கவாதத்தின் பொதுவான அறிகுறிகள் ஆகும். 

மூளை பக்கவாதத்தை எவ்வாறு தவிர்ப்பது

மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்

நவீன காலங்களில் மக்களின் வாழ்க்கை மன அழுத்தம் (Tension) நிறைந்ததாக உள்ளது. அதிலிருந்து உங்களை மெதுவாக மீட்டெடுக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

ALSO READ: Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் சுரைக்காய்..!!! 

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விலகி இருங்கள்

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும். புகைபிடிக்கும் பழக்கமும் மிகவும் ஆபத்தானதே. நிபுணர்களின் கூற்றுப்படி, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்

நவீன காலங்களில், நோய்களிலிருந்து விலகி இருக்க யோகா (Yoga) செய்வதையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது மனதை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. தினமும் காலையில் யோகா மற்றும் தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், பல வித இறுக்கங்கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். 

மருத்துவரின் ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளவும்

மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்களுக்கானவை. எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையாகவும் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். நோய் அல்லது தொற்றுநோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகவும்.

ALSO READ: Hair care Tips: முடி உதிர்தலை தடுக்க ‘இந்த’ 4 பொருட்களே போதும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News