Hair Care Mistakes: இந்த 5 தவறுகளை செய்வதால், முடி வலுவிழக்கும் உதிரும்

அழகுக்கு அழகு சேர்க்கும் முடியை பராமரிப்பது ஒரு கலை என்றால், முடி உதிர்தலை தடுக்க செய்யக்கூடாத விஷயங்களும் சில உண்டு    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 01:16 PM IST
Hair Care Mistakes: இந்த 5 தவறுகளை செய்வதால், முடி வலுவிழக்கும் உதிரும் title=

முடி பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா நீங்கள்? முடியை பராமரிக்கும் போது இந்த தவறுகளை செய்வது முடியை உதிரச் செய்யும் என்பதால், இந்தத் தவறுகளை உடனடியாக நிறுத்துங்கள்.

ஏனென்றால், குளிர்காலம் முடி பராமரிப்புக்கு முக்கியமான காலம் என்று கூறப்படுகிறது, குளிர்காலத்தில் தான், முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொடர்பான பிரச்சினைகளும் தொடங்குகின்றன. 

முடி உதிரத் தொடங்கிய பிறகே அதற்கான தீர்வை தேடும்போது நிவாரணம் கிடைக்க அதிக காலம் எடுக்கிறது. அதிலும் குளிர்காலத்தில் தலைமுடியை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

முடியை வலுவாகவும் நீளமாகவும் வைத்திருக்க, முடியைப் பராமரிப்பது (Hair Care) மிகவும் அவசியம். ஆனால், தலைமுடியை பராமரிக்கும் போது சில தவறுகளை தெரியாமல் செய்து விடுவதால், முடி பலவீனமாகிவிடுகிறது. இதற்குப் பிறகு முடி உதிரத் தொடங்குகிறது அதோடு, முடியின் பளபளப்பும் குறைந்துவிடும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இந்த தவறுகளை செய்ய வேண்டாம்.

READ ALSO | Dengue காய்ச்சல் அறிகுறியா? சுலபமான வீட்டு வைத்தியக் குறிப்புகள்

1. ஈரமான முடியை சீவுதல்
பெரும்பாலும் மக்கள் ஷாம்பு செய்த பிறகு ஈரமான முடியை சீவுகின்றனர். இப்படி செய்வதால் முடி எளிதில் அவிழ்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஈரமான முடியை சீப்பினால் முடி உதிர்வு ஏற்படும். ஏனெனில், ஈரமான முடியின் வேர் தளர்வாக இருக்கும். என்வே, முடி உலர்ந்த பிறகே சீவுங்கள்.

2. ஈரமான முடியை பின்னல் போடுவது
முடி ஈரமாக இருக்கும்போதே முடியைக் கட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும்போது, வேலை செய்யும்போது தொந்தரவாக இருக்கும் என்பதால், முடி ஈரமாக இருக்கும்போது, தலையில் ரப்பர் பேண்ட் அல்லது கிளிப் போட்டுவிடுகிறார்கள். அதனால், முடியின் வேர்களில் ஏற்படும் அழுத்தமானது, முடியை பலவீனப்படுத்துகிறது.

3. தலைமுடியைக் கழுவிய பின் ஹேர் டிரையரை பயன்படுத்துவது
தலைக்கு குளித்த பிறகு, உடனே முடியை காய வைப்பதற்காக ஈரமான கூந்தலில் ஹேர் டிரையர் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதும் முடியை பலவீனப்படுத்தும். இப்படி செய்வதால் முடி வறண்டு, உயிரற்றதாகிவிடும்.

4. முடி ஈரமாக இருக்கும்போதே தூங்குவது
சிலர் தூங்குவதற்கு முன்னதாக, இரவில் தலைக்கு குளித்துவிட்டு, ஈரம் காய்வதற்கு முன்னர் தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்படி செய்வதால் முடி உடைந்து போவதோடு,  சளி ஏற்படும் அபாயமும் உள்ளது. இரவுக்கு பதிலாக மாலையில் தலைமுடியைக் கழுவினால், தூங்குவதற்கு முன்னதாக முடி காய்ந்துவிடும்.

குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பல பழங்களைக் கொண்டு ஹேர் மாஸ்க்குகள் போட்டால், முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்.  

(இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை.)  

READ ALSO | கொரொனாவால் இறந்தவர்களின் சடலங்களை 16 மாதங்களாக மார்சுவரியில் வைத்திருந்த மருத்துவமனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News