நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

Health Benefits of Barley Water: பார்லி தண்ணீர் தமனிகளில் சேரும் கொழுப்பை கரைத்து கெட்ட கொலஸ்ட்ராலை கரப்பது மட்டுமின்றி,  உடல் பருமன், சர்க்கரை போன்றவற்றுக்கும் தீர்வாக அமைகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2023, 03:02 PM IST
  • பார்லியில் அதிக நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
  • பார்லி தண்ணீரைக் குடிப்பது உங்கள் சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • பார்லி தண்ணீர் உடலை நச்சு நீக்கும் ஒரு சிறந்த பானம்.
நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி! title=

அதிக கொலஸ்ட்ரால் முதல் இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமன் வரையிலான நோய்களுக்கு பார்லி தண்ணீர் உங்களுக்கு  அமிர்தம் போன்றது என்றால் மிகையில்லை. பார்லி வாட்டர் மிகவும் சத்தான பானமாகும். இதில் ஒன்றல்ல, இரண்டல்ல, பல நன்மைகள் உள்ளன. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. தினமும் குடிக்க முடியாவிட்டால், வாரத்திற்கு மூன்று முறையாவது குடிப்பதன் மூலம் உங்கள் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.

பார்லி தண்ணீரின்  அற்புத நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

கெட்ட கொலஸ்ட்ரால்: நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இதுவே சிறந்த வழி, ரத்தத்தில் தேங்கியிருக்கும் கொழுப்பு வேகமாக உருகத் தொடங்கும்.

1. கொலஸ்ட்ராலை குறைக்கும் பார்லி தண்ணீர்

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் வெளியிட்ட அறிக்கையில், பார்லி நீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் எரிப்பதன் மூலம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், தாமிரம், புரதம், அமினோ அமிலங்கள், உணவு நார்ச்சத்து மற்றும் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பார்லியில் காணப்படுகின்றன. அவை கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன.

2. எடை இழப்புக்கான பார்லி

பார்லியில் பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உங்களுக்கு வயிறு நிறைந்துள்ளதாக உணர வைக்கிறது. பார்லியை தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டும்போது, ​​அதில் உள்ள கலோரிகளின் அளவு குறைகிறது. அதனால் தான் பார்லி தண்ணீரைக் குடிப்பது எடையைக் குறைக்கும் உணவில் உதவியாக இருக்கும்.

3. சர்க்கரை நோய்க்கான பார்லி

பார்லி நீர் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக அமைகிறது.

4. நச்சுக்களை நீக்கும் பார்லி

பார்லி தண்ணீர் உடலை நச்சு நீக்கும் ஒரு சிறந்த பானம். பார்லி நீர் குடலை சுத்தப்படுத்தவும், குடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நச்சு நீக்கும் நன்மைகளைத் தவிர, பார்லி தண்ணீரைக் குடிப்பது உங்கள் சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | கண்ணுக்கு நல்லதுன்னு Vitamin A கண்டபடி சாப்பிடாதீங்க.. பேராபத்து!

5. UTI தொற்றை நீக்கும் பார்லி நீர்

பார்லி தண்ணீர் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (UTIs) குறைக்கவும் உதவும் டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. பார்லி தண்ணீர் குடிப்பதால் UTI குணமாகும்.

6. செரிமானத்திற்கு பார்லி

பார்லியில் அதிக நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். பாரம்பரியமாக, இரைப்பை குடல் அழற்சி, வெப்ப சோர்வு மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு பார்லி நீர் வீட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

7.  யூரிக் அமிலம்

இந்த மூலிகை தேநீர் எலும்புகளில் உறைந்திருக்கும் அழுக்கு யூரிக் அமிலத்தின் படிகங்களை உடைத்து, மூட்டு மற்றும் முழங்கால் வலியைக் குறைக்கும்.

பார்லி தண்ணீரை தயாரிக்கும் முறை:

பார்லி தண்ணீர் தயாரிக்க, இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் பார்லியை போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். முன் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி கொள்ளவும். நீங்கள் இதில் எலுமிச்சைப் பழம், தேன் அல்லது ஏலக்காய் மற்றும் பெருஞ்சீரகம் போன்ற மசாலாப் பொருட்களுடன் கலக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | அடிக்கடி கை, கால்கள் மரத்து போகின்றதா... அலட்சியம் வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News