Uric Acid: யூரிக் அமிலம் & சிறுநீரக பிரச்சனைகளுக்கு எமனாகும் வாழைப்பூ! நன்மை தரும் வாழை

High Uric Acid Control: வாழைப்பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். யூரிக் ஆசிட் பிரச்சனை இருந்தால், தொடர்ந்து வாழைப்பூவை உட்கொள்வது மிகவும் நல்லது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2024, 08:47 AM IST
  • வாழைப்பழம் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது
  • ஊட்டச்சத்து மிகுந்த வாழைப்பூ
  • வாழைப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்
Uric Acid: யூரிக் அமிலம் & சிறுநீரக பிரச்சனைகளுக்கு எமனாகும் வாழைப்பூ! நன்மை தரும் வாழை title=

Uric Acid remedies : வாழைப்பழத்தில் பாஸ்பரஸ் கால்சியம் பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்தியாவில் வாழைப்பூ உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.  அதிலும் தமிழர் கலாசாரத்தில் வாழைப்பூ மிகவும் முக்கியமான உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில பிரச்சனை மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
வாழைப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை இரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன, மேலும், பியூரின் செரிமானத்தை தீவிரப்படுத்துகின்றன. இவை உடலில் இருந்து பியூரின்களை மலம் வழியாக வெளியேற்றுகிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. பாலிஃபீனால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு வழங்கும். இந்தச் சத்துக்கள் மூட்டு வலியைக் குறைத்து எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது. எலும்பின் உள்ளே குழி உருவாக ஆரம்பித்தால், அதில் யூரிக் அமிலம் சேரும். வாழைப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை துரிதமாக செயல்பட்டு, எலும்பை வலுப்படுத்துவதால், எலும்பில் குழி உருவாவது தடுக்கப்படுகிறது. மூட்டு வலியும் குணமாகிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமானால்... விஷமாகும் தண்ணீர்..

வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. ஆனால், துவர்ப்புத் தன்மையுள்ள வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் வாழைப்பூ, வேறு சில நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பூ கட்டுப்படுத்தும் நோய்கள்

நீரிழிவு

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ வரப்பிராசதம். வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்கும். இதனால் ர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

மூல நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ

மலம் வெளியேறும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். 'ரத்த மூலம்' எனப்படும் மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனையை சீராக்க வாழைப்பூ அருமருந்தாக  பயன்படும்.

சூட்டை தணிக்கும் வாழைப்பூ

உடல் சூட்டைத் தணிக்கும் வாழைப்பூ, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. வாழைப்பூவை வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு தணியும்.

மேலும் படிக்க | மனதையும் உடலையும் சோர்வாக்கும் பொட்டாசியம் குறைபாடு! இந்த அறிகுறிகள் இருக்கா?

செரிமானத்தை சீராக்கும் வாழைப்பூ

செரிமான  பிரச்சனை, வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஆகியவற்றை போக்கும் மருத்துவ பண்புகள் வாழைப்பூவில் உண்டு.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ

கர்ப்பப்பையை வலுவாக்கும் வாழைப்பூ பெண்களுக்கு கிடைத்த அற்புதமான காய். வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் மாதவிட்டாயின் போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் வாழைப்பூ, வெள்ளைப்படுதல் பிரச்சனையையும் சீராக்கும்.  

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைப்பூ

வாழைப்பூவை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

வயிறு பிரச்சனைகள், வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கவும் வாழைப்பூ உதவுகிறது. எனவே, வாழைப்பூவை சுத்தம் செய்ய நேரம் ஆகும் என்பதால் தயங்காமல், அடிக்கடி சமைத்து சாப்பிடுவது மிகவும் உடலுக்கு நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News