Pimples Reasons: முகப்பரு வர இதெல்லாம் கூட காரணமாகுமா?

பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2021, 03:32 PM IST
Pimples Reasons: முகப்பரு வர இதெல்லாம் கூட காரணமாகுமா?  title=

Pimples Reasons: பெண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பருக்களின் பிரச்சனை ஆகும். அதிகப்படியான எண்ணெய், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, முகப்பரு பிரச்சினை ஏற்படுகின்றது.

இவற்றைத் தவிர, நமது சில தனிப்பட்ட விஷயங்களும் முகத்தில் முகப்பருவை (Pimples) ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வெண்டும், ஆனால், இதற்கு நாம் பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும் சில தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

முகப்பருவை ஏற்படுத்தும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்

மெத்தை உறை

நீங்கள் பயன்படுத்தும் தலையணையின் உறையும் உங்கள் முகத்தில் முகப்பரு ஏற்பட காரணமாக அமையலாம். தலையணை உறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மென்மையான உறையை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், தலையணை உறையில் இருக்கும் வியர்வை, பொடுகு, நீங்கள் வெளியில் செல்வதால் முகத்தில் (Face) இருக்கும் தூசி-மண் போன்றவற்றுடன் தொடர்பில் வருவதால் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.

ALSO READ: முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிமுறைகள்..!

மொபைல் போன்

மொபைல் காரணமாக, பெரும்பாலும் காது மற்றும் அதைச் சுற்றியுள்ள தோல் பகுதியில் பிரச்சினை ஏற்படுகிறது. பெரும்பாலும் முகத்தில் எண்ணெய், வியர்வை, அழுக்கு ஆகியவை இருக்கும்போது, அப்படியேதான் நாம் மொபைலைப் பயன்படுத்துகிறோம். இதன் காரணமாக அழுக்கு, வியர்வை போன்றவை மொபைல் அல்லது அதன் கவரிலும் பட்டுவிடும். நாம் முகத்தை சுத்தம் செய்கிறோம், ஆனால் மொபைலை சுத்தம் செய்வதில்லை. அப்படியே அந்த மொபைலை மீண்டும் பயன்படுத்துகிறோம். காதருகில் அதே மொபைலை வைக்கிறோம். இந்த வகையில், மொபைலில் இருக்கும் தூசும் மாசும் நம் முகத்தில் மீண்டும் பட்டு, முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன.

துண்டு

முகப்பருவை ஏற்படுத்தும் மூன்றாவது பொருள் நாம் பயன்படுத்தும் துண்டாகும். உங்கள் துண்டு வேறொருவரால் பயன்படுத்தப்பட்டால் அல்லது அவை எப்போதும் அசுத்தமாக இருந்தால், முகத்தில் முகப்பரு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. துண்டை வெயிலில் (Sunlight) போட்டு தினமும் காய வைக்க மறக்காதீர்கள். இதன் காரணமாக ஈரப்பதமும் துர்நாற்றமும் அதில் வராது.

இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்று இல்லை. இது கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ: முக பருக்களை போக்கும் பனிக்கட்டி, மேலும் பல நன்மைகள்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News