இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் திறன் பெற்ற ‘சில’ மூலிகைகள்!

மாரடைப்பு அபாயத்தை தடுக்க கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இதற்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள்  மற்றும் உணவு பழக்கங்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 5, 2023, 02:48 PM IST
  • மாரடைப்பு போன்ற இதய நோய்களைக் கையாள்வதில் உதவுகிறது.
  • கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருள்.
  • இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கலாம்.
இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் திறன் பெற்ற ‘சில’ மூலிகைகள்! title=

கொலஸ்ட்ரால் உடலுக்குள் செல்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. இது தவிர, ஹார்மோன்கள், பித்த அமிலம் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் சில முக்கியமான செயல்பாடுகளைச் செய்ய உடல் கொலஸ்ட்ராலைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், அதன் அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் போது, குறிப்பாக கெட்ட கொலஸ்டிரால் அதிகரிக்கும் போதும் அது சில கடுமையான உடல் நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருள். இது ஒரு வகை கொழுப்பு அமிலமாகும். இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இதய நோய் முதல் பக்கவாதம் வரை, இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கலாம். 

கொழுப்பை எரிக்கும்  உணவுகள் & ஆயுர்வேத மூலிகைகள்

மாரடைப்பு அபாயத்தை தடுக்க கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இதற்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள்  மற்றும் உணவு பழக்கங்கள். இந்நிலையில், கொலஸ்ட்ராலைக் (Cholesterol) கட்டுக்குள் வைத்திருக்கவும், அடைப்பட்ட நரம்புகளைத் திறக்க உதவும் சில ஆயுர்வேத மூலிகைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். இவற்றில் சில உங்கள் சமையலறை சரக்கறையில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்.

பூண்டு

பூண்டு, கெட்ட கொழுப்பைத் தடுக்க உதவும் மற்றொரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். பூண்டு பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்திற்கு பரிச்சயமான பொருள். அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் இரண்டு பூண்டு பற்கள் உடலில் உள்ள உயர் இரத்த கொழுப்பை விரைவாக எரிக்க உதவும். பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்.. சூப்பரா குறைக்கலாம்

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி சிறந்த மூலிகை டையூரிடிக் முகவர்களில் ஒன்றாகும். தனியா என்றும் அழைக்கப்படும் கொத்தமல்லி சமையலறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகையாகும். இது சிறுநீரகங்களுக்கு புத்துயிர் அளிக்கும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் போது சிறப்பாக செயல்பட உதவும். சிறுநீரகங்கள் மூலம் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை எரித்து வெளியேற்ற இது உதவுகிறது.

துளசி

துளசி  இரத்த ஓட்டத்தில் அதிக கொழுப்பின் அளவைக் குணப்படுத்தும் மற்றொரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். துளசி இலைகள் சிறுநீரகத்தின் மூலம் அதிகப்படியான கொழுப்பை அகற்றும். இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைப்பதில் துளசி இலைகள் மிகவும் திறமையானவை, தினமும் 2-3 இலைகளை சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பு குறைய உதவும்.

குங்குலு

குங்குலு பிரபலமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும், இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் அதிக கொழுப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையில் குக்குல்ஸ்டிரோன் உள்ளது, இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த மூலிகையாக அறியப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து விடுபட ஒருவர் 25 மில்லி கிராம் வரை குங்குலுவை உட்கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அர்ஜுனா

அர்ஜுனா மற்றொரு சக்திவாய்ந்த ஆயுர்வேத மூலிகையாகும், இது மாரடைப்பு போன்ற இதய நோய்களைக் கையாள்வதில் உதவுகிறது. அர்ஜுனா மரத்தின் பட்டையை பொடி வடிவில் உட்கொள்ளலாம். எனினும், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அளவைத் திட்டமிடுங்கள். அர்ஜுனா பவுடர் கொலஸ்ட்ராலை கரைத்து, இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டது. ஒருவர் காலையில் சாப்பிடும் முன் வெதுவெதுப்பான நீரில் பொடியை கலந்து உட்கொள்ளலாம்.

அல்ஃபால்ஃபா

அல்ஃபால்ஃபா என்னும் குதிரை மசால் அதிக கொலஸ்ட்ராலை எரிக்கும்  சிறந்த ஆயுர்வேத வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனிகளில் ஏற்படும் அடைப்பை அழிக்கும் திறன் இதற்கு உள்ளது. இதனை சாறுடன் (தினசரி) சாப்பிடலாம். இருப்பினும், உங்கள் உணவில் இதனை சேர்ப்பதற்கு முன், ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள்,  சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. அறிகுறிகள் நீண்ட காலமாக நீடித்தால் அவற்றை புறக்கணிக்காதீர்கள். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | உடல் எடை சட்டுனு குறைய... தூங்க செல்லும் முன் இந்த 8 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News