ஆப்பிள்...நீரிழிவு நோய் முதல் இரத்த அழுத்தம் வரை: அற்புதமான நன்மைகளை தரும் பழம்

Health Tips: அனைத்து பழங்களில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் ஆரோகியமான பழங்கள பற்றி பேசும்போதெல்லாம், ஆப்பிளை பற்றி பேசாமல் இருக்க முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2023, 03:10 PM IST
  • ஆப்பிள் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • இதில் ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் நன்மை அளிக்கும்.
ஆப்பிள்...நீரிழிவு நோய் முதல் இரத்த அழுத்தம் வரை: அற்புதமான நன்மைகளை தரும் பழம் title=

Health Tips: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உணவின் ஊட்டச்சத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கின்றன. நமது உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை எளிதில் வழங்க முடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அனைத்து மக்களும் குறைந்தது இரண்டு பழங்களையாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

அனைத்து பழங்களிலும் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் ஆரோகியமான பழங்கள பற்றி பேசும்போதெல்லாம், ஆப்பிளை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இது மட்டுமின்றி, 'ஏன் ஆப்பிள் எ டே கீப்ஸ் த டாக்டர் அவே', அதாவது தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்ளும் ஒரு நபர் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என ஒரு பழமொழி உண்டு. ஆனால், இது எப்படி நடக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள் (Health Benefits of Appple): 

ஆப்பிள் பல நன்மைகளைக் கொண்டுள்ளது

குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்ட பழங்களில் ஆப்பிள் ஒன்றாகும். நடுத்தர அளவிலான ஆப்பிளில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதாவது அதை உட்கொள்வதால் எடை அல்லது சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஆப்பிள் பழம் தவிர, ஜூஸ், சைடர் மற்றும் ஆப்பிள் சாஸ் ஆகியவையும்  உட்கொள்ளப்படுகின்றன. ஆப்பிளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்னென்ன குணங்கள் உள்ளன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அகற்றும் ‘சூப்பர்’ பானங்கள்... தடாரிக்கும் முறை..!

ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம்

ஆப்பிளில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதன் தோலில் க்வெர்செடின் காணப்படுகின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கிறது. இது பல நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவியாக இருக்கும். இது தவிர, ஆப்பிள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் அளிக்கும் நன்மைகள் 

நீரிழிவு நோயில் (Diabetes) எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற குழப்பம் எப்போதுமே நீரிழிவு நோயாளிகளுக்கு இருப்பதுண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள்களை உட்கொள்வது ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த சர்க்கரை அளவு உள்ள ஆப்பிள் போன்ற பழங்கள் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்கும். 38,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட, தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 28% குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

இரத்த அழுத்த பிரச்சனையில் ஆப்பிளின் நன்மைகள்

நீரிழிவு நோயுடன், உயர் இரத்த அழுத்தமும் (Blood Pressure) தற்போதைய காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பிரச்சனைக்கும் ஆப்பிள் சாப்பிடுவது நன்மை பயக்கும். பல ஆய்வுகள் ஆப்பிள் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கண்டறிந்துள்ளன. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும். அதாவது, ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கறிவேப்பிலை: தலை முதல் கால் வரை.... ஒரே இலை ஓராயிரம் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News