High Uric Acid பிரச்சனையா? இந்த தவறுகளை செய்யாதீங்க

யூரிக் அமில அளவைக் குறைப்பது எப்படி: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் இது பாதங்கள் மற்றும் மூட்டுகளில் வலியை அதிகரிக்கச் செய்யும், இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 19, 2022, 02:21 PM IST
  • யூரிக் ஆசிட் கட்டுப்பாடு குறிப்புகள்
  • யூரிக் ஆசிட் நோயாளிகளுக்கான டிப்ஸ்
  • யூரிக் அமிலம் அறிகுறிகள்
High Uric Acid பிரச்சனையா? இந்த தவறுகளை செய்யாதீங்க title=

யூரிக் அமிலம் நோயாளிகளுக்கான டிப்ஸ்: தற்போதைய காலகட்டத்தில் யூரிக் அமிலம் பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். நமது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு மிக அதிகமாகும் போது இத்தகைய பிரச்சனைகள் பெருமளவில் அதிகரிக்கிறது. இதனால் பாதங்கள், மூட்டுகள் மற்றும் விரல்களில் படிகங்கள் உருவாக வழிவகுக்கிறது, இது வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே உடலில் யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், நீங்கள் சில தவறுகளைச் செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும், இல்லையெனில் பிரச்சனையை அதிகரிப்பதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைப்பது?

யூரிக் அமிலம் திடீரென அதிகரிப்பதால் பிரச்சனையா: இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!

1. எடை அதிகரிப்பதை அனுமதிக்காதீர்கள்
யூரிக் அமிலம் உங்கள் அதிகரித்து வரும் எடையுடன் தொடர்புடையது, எனவே பிரச்சனை அதிகரிக்கக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், கீல்வாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். 

2. வைட்டமின் சி பற்றாக்குறை இருக்க வேண்டாம்
இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், வைட்டமின் சி குறைபாடு இல்லாத உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். இந்த ஊட்டச்சத்தின் உதவியுடன், யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கலாம். எனவே, கண்டிப்பாக ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுங்கள்.

3. இனிப்புப் பொருட்களைத் தவிர்க்கவும்
நீங்கள் இனிப்புகள், இனிப்பு உணவுகள் அல்லது இனிப்பு பானங்களை அதிகமாக உட்கொண்டால், யூரிக் அமிலத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும் மற்றும் கீல்வாதத்தின் ஆபத்து அதிகரிக்கும். இதில் கலோரிகள் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

4. குறைந்த ப்யூரின் உணவுகளை சாப்பிடுங்கள்
யூரிக் அமில பிரச்சனையை குறைக்க, தினசரி உணவில் அதிக ப்யூரின் உள்ளடக்கம் கொண்ட உணவுகளுக்கு பதிலாக, குறைந்த பியூரின் உணவை உண்ண வேண்டும், இதற்காக நீங்கள் பால் பொருட்கள், பருப்புகள், பழங்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு மற்றும் சாதம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

5. மது பழக்கத்தை கைவிடவும்
ஆல்கஹால் எப்போதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது, இது உடலின் பல பாகங்களை பாதிக்கிறது, ஆனால் அது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது என்பது மிகச் சிலருக்கு தெரியும், எனவே இந்த கெட்ட பழக்கத்தை எவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News