பலவீனத்திற்கே ‘அல்வா’ கொடுக்கும் ஹல்வா! ஆரோக்கியமான எலும்புகளுக்கு சூப்பர் உணவு!

Remedies For Bone Weakness: எலும்புகளில் வலி அதிகமாக இருக்கிறதா? வலியைக் குறைக்க ஆரோக்கியமான உணவு இது... பலவீனத்தையும் பலமாக்கும் உணவுகளின் சங்கமம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2024, 03:59 PM IST
  • எலும்புகளில் வலி அதிகமாக இருக்கிறதா?
  • வலியைக் குறைக்க ஆரோக்கியமான உணவு
  • பலவீனத்தையும் பலமாக்கும் உணவுகளின் சங்கமம்...
பலவீனத்திற்கே ‘அல்வா’ கொடுக்கும் ஹல்வா! ஆரோக்கியமான எலும்புகளுக்கு சூப்பர் உணவு! title=

நமது எலும்புகள் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பவை. பிறந்ததில் இருந்து எலும்புகள் வளர்வதால் தான் நமது உருவமும் மாறிக் கொண்டே இருக்கிறது. எலும்பு என்பது வேகமாக வளர்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன், எலும்புகளின் வளர்ச்சி குறைந்துவிடும். அதன்பிறகு, வளர்ச்சி நின்று, அவை பலவீனமாகத் தொடங்குகின்றன.

அதன் பிறகு, ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எலும்புகள் மிகவும் பலவீனமாகும் நிலை ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்லலாம். எலும்புகளை வலுவிழக்கச் செய்து, உடையக்கூடிய அளவுக்கு பலவீனமாகும் நிலை இது. 

எலும்புகள் மற்றும் மூட்டுகள்
எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வளராவிட்டாலும், அது தேய்மானம் அடையாமல் பார்த்துக் கொள்ள நாம் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் கால்சியம் அளவு குறைந்து போவது, உடல் உழைப்பில்லாமல் போவது, வயதாவது, ஹார்மோன்கள் மாறுவது, மோசமான உணவுமுறை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் என பல காரணங்கள் உள்ளன.

எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவு தேர்வுகள் நல்ல தீர்வாக இருக்கும். எலும்புகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சேர்ப்பதே சிறந்த வழி.

உடலில் மறைந்திருக்கும் சில நோய்கள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சில தீவிர காரணங்களாலும் எலும்பு வலி ஏற்படலாம். அதிலும் ஏற்கனவே எலும்பு வலி இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில், வலி அதிகமாகும். அன்றாட பணிகளைச் செய்வதே கடினமாக இருக்கும்.சில நேரங்களில் வலி அதிகமாகி, உட்காரவும், நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவும், சரியாக நடக்கவும் கூட கடினமாகிவிடும்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட இரவில் இதை செய்தால் போதும்: சூப்பரா குறைக்கலாம்

வலுவான எலும்புகளுக்கான அல்வா
எலும்பு வலி பிரச்சனையை குறைக்க, கால்சியம், வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களை சரியான அளவில் பெறுவது மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் அனைத்தும் இல்லாததால், எலும்புகளில் வலி அதிகரிக்கிறது. எலும்பை வலுப்படுத்துவது முதல் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கும் ஒரு சுவையான உணவை தெரிந்துக் கொள்ளுங்கள். எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு உங்கள் எலும்பை ஆரோக்கியமாக்கும்.

எள் ஹல்வா 
எள்ளை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.  கருப்பு திராட்சையை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். சிறிது பால் சேர்த்து மூன்று பொடிகளையும் சேர்த்துக் சமைக்கவும். பதம் நன்றாக இறுகும்போது அதில் சிறிதளவு பேரிச்சம் பழ சிரப் மற்றும் தேன் கலந்துக் கொள்ளவும்.

பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிடவும். அதில் வறுத்த முந்திரிகளை சேர்த்துக் கொள்ளவும். சத்துள்ள அல்வா ரெடி. இந்த ஹல்வா, பலவீனமான எலும்புகளுக்கு கல்தா கொடுக்கும்.  

ஹல்வாவின் ஊட்டச்சத்து

எள்ளின் ஆரோக்கிய நன்மைகள்
எள் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, இது குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.  

கருப்பு திராட்சையின் நன்மைகள்
கருப்பு திராட்சைகளில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு அம்சங்களுமே எலும்புகளுக்கு நன்மை பயக்கும். 

இந்த இரண்டைத் தவிர, எள் ஹல்வாவில் சேர்க்கும் நெய், பேரிச்சம்பழம், தேன் என அனைத்துமே ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை தான்.

கீல்வாதத்திலிருந்து நிவாரணம்
பலவீனமான எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எண்ணெய் பசை இல்லாததால் மூட்டுவலி போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கீல்வாத நோயாளிகளுக்கு இந்த ஹல்வாமிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவற்றிலிருந்தும் இந்த ஹல்வா நிவாரணம் அளிக்கிறது.

மேலும் படிக்க | Healthy Juices: குழந்தையின் புத்தியை ஷார்ப் ஆக்கும் ஜூஸ்கள்! வளரும் குழந்தையின் ஆரோக்கிய ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News