முக சுருக்கங்களை ஓட விரட்ட ‘இந்த’ 6 விஷயங்களை செய்யக் கூடாது

முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் நம்மை மிகவும் வயதானவர்காக காட்டும் அதுவும் குளிர்காலத்தில் தோல் வறண்டு போகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 12, 2021, 03:12 PM IST
முக சுருக்கங்களை  ஓட விரட்ட ‘இந்த’ 6 விஷயங்களை செய்யக் கூடாது title=

முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் நம்மை மிகவும் வயதானவர்காக காட்டும் அதுவும் குளிர்காலத்தில் தோல் வறண்டு போகும். அதே நேரத்தில், உடலின் உட்புற ஈரப்பதமும் குறைகிறது. இந்த பருவத்தில், தோலில் சுருக்கங்கள் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது  எனவே இந்த 6 விஷயங்களில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்.

சில பழக்கவழக்கங்கள் உங்கள் சருமத்தின் வயதை அதிகரித்து, வயதானவரின் தோலைப் போன்று தோற்றமளிக்கும், அது சுருக்கங்களுடன் தொடங்குகிறது. சருமத்தின் இந்த 6 எதிரிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. அடிக்கடி ஒரே மாதிரியான முக அசைவுகள்

சில முக அசைவுகளை அடிக்கடி செய்தால், அவை சுருக்கங்களை ஏற்படுத்தலாம். ஏனெனில், குளிர்காலத்தில் சரும வறட்சி ஏற்படும் அபாயம் அதிகம்.  கண்களின் ஓரங்களில் மடிப்புகள் விழுவது, நெற்றியில் மடிப்புகள் விழ காரணமான முக அசைவுகளை தவிர்க்க வேண்டும் . இந்த இடங்களை எப்போது ஈரப்பதமாக பராமரிக்க மறக்காதீர்கள்.

ALSO READ | INDUCTION COOKING: இண்டக்‌ஷன் அடுப்பில் சமையல்; 'இவற்றை’ செய்ய மறக்க வேண்டாம்..!!

2. குளிர்காலத்தில் அதிக சூரிய வெளிச்சம்

குளிர்காலத்தில் சூரிய ஒளியில் உட்காருவது மிகவும் நல்லது. ஆனால் குளிர்காலத்தில் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உங்கள் தோலை பாதொக்கும். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்தை (Skin) சேதப்படுத்தி சுருக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, குளிர்காலத்தில் கூட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்திய பிறகு வெயிலில் செல்லுங்கள்.

3. புகைபிடித்தல்
புகைபிடித்தல் சருமத்தின் வயதை கூட்டுகிறது. ஏனெனில், இது சருமம் உள்ளே இருந்து நீரிழப்பை சந்திக்க காரணமாகிறது. புகைபிடிப்பவர்களுக்கு வாயைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.

4. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்

நீங்கள் ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக் கொண்டால், உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், சருமத்தில் வயதான அறிகுறிகளைக் காண்பிக்கும் ஆபத்து மிக அதிகம். அதிக கொழுப்புள்ள உணவை உட்கொள்வது சருமத்தின் அமைப்பையும், சருமத்தின் நிறத்தையும் கெடுத்து, முகப்பருவை உண்டாக்கும். உடற்பயிற்சியின்மை கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கிறது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

5. குப்புற படுத்து தூங்குவது

நீங்கள் குப்புறப்படுத்து தூங்கினால்,  சருமத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுகிறது. இது வெளிப்புற காரணங்களால் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். எனவே, தலையணை உறையை எப்போதும் சுத்தமாக வைத்து, குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குவதைத் தவிர்க்கவும்.

6. தோல் பராமரிப்பை அலட்சியப்படுத்துதல்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தோல் பராமரிப்பு  மிகவும் முக்கியமானது. ஏனெனில் வயதாக ஆக, சருமத்தின் ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சரியான கவனிப்பு எடுக்க வேண்டும்.

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News