உங்கள் அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற மிக எளிய வீட்டு வைத்தியம்..!!

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் இந்த மருக்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2021, 06:38 AM IST
உங்கள் அழகை கெடுக்கும் மருக்களை அகற்ற மிக எளிய வீட்டு வைத்தியம்..!! title=

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் இந்த மருக்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது. கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

மருக்கள் பொதுவாக முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில்  தோன்றும். இதற்காக சிலர் பணம் அதிகம் செலவழித்து அறுவை சிகிச்சை மூலம் நீக்குகின்றனர். ஆனால், செலவில்லாமல், பக்க விளைவு ஏதும் இல்லாமல் வீட்டில் நாம் தினம் உபயோகிக்கும் பொருளை வைத்தே அதனை மருக்களை (Wart Removal) நீக்கி விடலாம். 

மருக்கள் ஒரு தோல் பிரச்சனை. பல சமயங்களில் உடலில் ஒரே இடத்தில் பல மருக்கள் இருக்கும். அது தோற்றத்தையே கெடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள 4  எளிய முறைகளை பின்பற்றி, மருக்களை வேரில் இருந்து நீக்கலாம். செலவின்றி, அறுவை சிகிச்சையின்றி வீட்டில் இருந்த படியே மருக்களை அகற்றலாம் (Wart Removal).

ALSO READ | முக சுருக்கங்களை ஓட விரட்ட ‘இந்த’ 6 விஷயங்களை செய்யக் கூடாது

1. பூண்டு

மருக்களை நீக்குவதற்கு பூண்டு மிகவும் பயனுள்ள தீர்வாகும். 2 பல் பூண்டு தோலுரித்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதற்குப் பிறகு, இந்த பேஸ்ட்டை மருக்கள் மீது தடவி, பருத்தி அல்லது பேண்டேஜால்  மூடவும் . 25-30 நிமிடங்களுக்கு பிறகு அதனை கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால் மருக்கள் வேரில் இருந்து அகற்றப்படும்.

2. சூடான நீர்

சில நேரங்களில் மருக்கள் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே வரும். அதனை கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம். தினமும் ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, 30 நிமிடங்களுக்கு மருவை அழுத்தவும். இதை வாரத்திற்கு 3 முறை செய்யவும். படிப்படியாக மருக்கள் நிரந்திரமாக போய்விடும். சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு தண்ணீர் சூடாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ALSO READ | Cinnamon: பல வித வலிகளுக்கு நிவாரணமாகும் இலவங்கபட்டை..!!

3. வாழைப்பழம்
வாழைப்பழம் (Banana) உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் வாழைப்பழத்தோலின் உதவியுடன், நீங்கள் மரு பிரச்சனையை அகற்றலாம். தூங்கும் முன் வாழைப்பழத் தோலின் உள் பகுதியை மருவின் மீது வைத்தால் போதும். இதற்குப் பிறகு, அதை ஒரு பருத்தி அல்லது பேண்டேஜின் உதவியால் கட்டவும். மறுநாள் காலை எடுத்துவிடுங்கள். இப்படி சில நாட்கள் செய்து வந்தால், மருக்கள் பிரச்சனை தீரும்.

4. ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயுடன் பேக்கிங் சோடாவை கலந்து மருக்களை நீக்குவது ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும். இரண்டு பொருட்களையும் கலந்து பேஸ்ட் தயாரித்து, பின்னர் 1.5 மணி நேரம் மருக்கள் மீது வைக்கவும். இதற்குப் பிறகு, ஈரமான துணியால் பேஸ்ட்டை சுத்தம் செய்யவும். இப்படி ஒரு மாதம் இருமுறை செய்து வந்தால் மருக்கள் மறையும்.

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Benefits of tomatoes: தக்காளியினால் ஏற்படும் ‘10’ அற்புதங்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News