மூளையின் ஆற்றலை ஒழித்துக் கட்டும் ‘சில’ பழக்கங்கள்!

Worst Habits That Spoils Your Brain Power: உங்களின் சில பழக்கவழக்கங்கள் மூளையை உள்ளே இருந்து பலவீனம்டையச் செய்கின்றன, எனவே இந்த பழக்கங்களை இன்றே கைவிட்டு விட வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 16, 2023, 01:57 AM IST
  • மூளை இளவயதிலேயே சோர்வடைந்து விடுகிறது.
  • மூளையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் பழக்கங்கள்.
  • மூளை என்பது உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு.
மூளையின் ஆற்றலை ஒழித்துக் கட்டும் ‘சில’ பழக்கங்கள்! title=

தற்போதையை, மோசமான வாழ்க்கை முறையால், மக்கள் பல கடுமையான நோய்களுக்கு இரையாகி வருகின்றனர், மேலும் மூளையும் இளவய்திலேயே சோர்வடைந்து விடுகிறது. மூளை என்பது உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு. எனவே, மூளை ஆரோக்கியத்தில் (Brain) சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஆனால், மனிதர்களின் சில பழக்கவழக்கங்கள் மனதையும் மூளையையும் உள்ளிருந்து வெறுமையாக்குகின்றன. ஆம், உங்களின் சில பழக்கவழக்கங்களால் உங்கள் மூளை இளவயதிலேயே பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நினைவாற்றலையும், மூளையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் பழக்கங்கள் இருந்தால், நீங்கள் உடனடியாக இந்த பழக்கங்களை மேம்படுத்த வேண்டும். மூளையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த பழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...

1. நீண்ட நேரம் திரைகளைப் பார்ப்பது

ஃபோன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிடுவது தீங்கு விளைவிக்கும். இவை நேரடியாக மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுமட்டுமின்றி திரையில் அதிக நேரம் செலவிடுவதால் கண் சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். பெரும்பாலான இளைஞர்களிடம் இந்தப் பழக்கம் இருந்தாலும் அப்படிச் செய்வது தவறு. எனவே, திரையில் பணிபுரியும் போது இடைவேளையில் ஓய்வு எடுப்பது அவசியம்.

2. அதிக மன அழுத்தம்

மன அழுத்தம் மூளையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். கவலை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நுட்பங்களைப் பயிற்சி செய்வது முக்கியம். மேலும் இளைஞர்கள் இதைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வேண்டும்.

3. தூக்கமின்மை

தூக்கமின்மை ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. இதையெல்லாம் தெரிந்தும் இளைஞர்கள் புறக்கணிக்கிறார்கள். மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தூக்கமின்மை காரணமாக நினைவாற்றல் குறைபாடுகள், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, மூளை ஆரோக்கியமாக இருக்க, குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம்.

4. ஆரோக்கியமற்ற உணவுகள்

மூளை ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில் அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மூளையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகையான உணவு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது நியூரான்களுக்கு சேதம் விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது முக்கியம், இதற்காக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

5. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

மூளை ஆரோக்கியமாக இருக்க வழக்கமான உடற்பயிற்சி மிகவும் அவசியம். இது தவிர வழக்கமான உடற்பயிற்சியும் உடலை வலிமையாக்கும். எனவே, தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க, இளைஞர்கள் காலையிலும் மாலையிலும் 25-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | டீ குடிச்சா இவ்வளவு நல்லதா? மன அழுத்தத்தை குறைக்கும் எலக்காய் தேநீர்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாரத்திற்கு இரண்டு முறை வெண்டைக்காய் சாப்பிட வேண்டுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News