வெண்டைக்காய் நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா... இது தெரியாம போச்சே..!!

Diabetes Control & Ladies Finger Water: வெண்டைக்காயில் இரத்த சர்க்கரையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வெண்டைகாயை சரியான வகையில் உட்கொள்வது கை மேல் பலன் கொடுக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 29, 2024, 02:44 PM IST
  • நீரிழிவு நோயை உணவு மற்றும் பல ஆயுர்வேத வீட்டு வைத்திய முறை மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • வெண்டைக்காயில் 20% கிளைசெமிக் குறியீடு மட்டுமே காணப்படுகிறது.
  • வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
வெண்டைக்காய் நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா... இது தெரியாம போச்சே..!! title=

நீரிழிவு நோய் என்பது மோசமான வாழ்க்கை முறையால் வேகமாக அதிகரித்து வரும் ஒரு நோயாகும். இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயை உணவு மற்றும் பல ஆயுர்வேத வீட்டு வைத்திய முறை மூலம் கட்டுப்படுத்தலாம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருந்துகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் குறிப்பிடத்தக்க பலன் இருப்பதில்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகச் செயல்படும் ஒரு காய்கறியைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். ஆம், நீரிழிவு நோயாளிகளுக்கு லேடிஸ்ஃபிங்கர் என்னும் வெண்டைக்காய் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் ( Ladies Finger for Diabetes Control )

வெண்டைக்காயில் இரத்த சர்க்கரையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வெண்டைகாயை சரியான வகையில் உட்கொள்வது கை மேல் பலன் கொடுக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வெண்டைக்காயை எவ்வாறு உட்கொள்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம். இதன் மூலம் நீங்கள் முழு நன்மைகளையும் பெறலாம். வெண்டைக்காயை காய்கறியாக சமைத்து சாப்பிடுவதை விட வெண்டைக்காய் நீர் நீரிழிவு நோயில் மிகவும் (Diabetes Control) பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை விரைவாக குறைக்கிறது. வெண்டைக்காய் நீரை எவ்வாறு தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வெண்டைக்காயை சரியாக உட்கொள்ளும் முறை

பெரும்பாலான வீடுகளில், வெண்டைக்காயை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்பினால், வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட வேண்டும். இதிலுள்ள உள்ள நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தயக்கமின்றி வெண்டைக்காயை உட்கொள்ள வேண்டும்.

வெண்டைக்காய் நீர் தயாரிப்பது எப்படி

1. வெண்டைக்காய் நீர் தயாரிக்க, 2-4 வெண்டைக்காய்களை எடுத்து நன்கு கழுவவும்.

2. பின்னர் குறுக்காக வெட்டுங்கள். லேடிஃபிங்கரை வெட்டிய பிறகு, அதில் உள்ள பிசிபிசுப்பான பொருள் வெளியே வருகிறது.

3. வெட்டப்பட்ட வெண்டைக்காயை தண்ணீர் நிரப்பப்பட்ட கிளாஸில் வைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

4. காலையில் வெண்டைக்காயை எடுத்து விட்டு இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

மேலும் படிக்க | தினமும் 30 நிமிடங்கள் சூரிய குளியல் போதும்... நோய்கள் எதுவும் அண்டாது..!!

டைப் 2 நீரிழிவு நோயில் வெண்டைக்காய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காய்கறிகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வெண்டைக்காயில் 20% கிளைசெமிக் குறியீடு மட்டுமே காணப்படுகிறது. எனவே இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது, ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, துருக்கியில், நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க வறுத்த வெண்டைக்காய் விதைகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆகியவை வெண்டைக்காயில் காணப்படுகின்றன. வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. சிறுநீரக நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

மேலும் படிக்க | Fox Nuts: உடல் பருமன் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் தாமரை விதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News