யூரிக் அமிலத்தை சீராக்கி மூட்டு வலி பிரச்சனை வராமல் தடுக்கும் உணவுகள்

Foods For Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது சிறுநீரக செயலிழப்பு, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், இந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2023, 06:29 AM IST
  • பியூரின் அளவைக் கட்டுப்படுத்த உணவைக் கட்டுப்படுத்துங்கள்
  • சிவப்பு இறைச்சி யூரிக் அமில பிரச்சனையை சீராக்கும்
  • முட்டை யூரிக் ஆசிட் அளவை மட்டுப்படுத்தும்
யூரிக் அமிலத்தை சீராக்கி மூட்டு வலி பிரச்சனை வராமல் தடுக்கும் உணவுகள் title=

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது சிறுநீரக செயலிழப்பு, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், இந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இப்போதெல்லாம் யூரிக் அமில பிரச்சனை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.இவ்வாறு உங்கள் உணவுமுறை மூலம் இந்தப் பிரச்சனையைத் தடுக்கலாம். எந்தெந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், யூரிக் ஆசிட் பிரச்சனை வராது
யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனையால் பல நோய்கள் உங்களைத் தாக்கும். மறுபுறம், உடலில் யூரிக் அமிலத்தின் பிரச்சனையால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏனெனில், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது, ​​அது உடலின் மூட்டுகளில் படிந்து விடும். இதன் காரணமாக மூட்டுவலி வரலாம்.

மேலும் படிக்க | உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் 

இவற்றை உட்கொள்வதால் யூரிக் அமில பிரச்சனை நீங்கும்
குறைந்த கொழுப்பு பொருட்கள் 
உங்களுக்கு யூரிக் அமில பிரச்சனை இருந்தால், உங்கள் உணவில் குறைந்த கொழுப்புள்ள பொருட்களை சேர்க்க வேண்டும். இதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

முட்டை 
அசைவ உணவு உண்பவர்கள் தங்கள் நாளை முட்டையுடன் தொடங்குவார்கள். முட்டைகளை சாப்பிட்டால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனையை ஓட விரட்டும். எனவே முட்டைகளை உண்டால், யூரிக் அமில பாதிப்பு குறையும்.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் 
யூரிக் அமில பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்ய, உங்கள் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும். அவற்றை உட்கொள்வதன் மூலம், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.

முழு தானியங்களை உட்கொள்ளுங்கள்
யூரிக் அமிலத்தின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவற்றை உண்பதால் உடலில் யூரிக் ஆசிட் பிரச்சனை வராது என்று சொல்லலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா? ஆரோக்கிய நன்மைகள் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News