வாழ்க்கையை முடக்கும் யூரிக் அமில பிரச்சனை! தீர்வைத் தரும் ‘மேஜிக்’ ஜூஸ்!

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 5, 2023, 10:01 AM IST
  • யூரிக் அமிலம் என்பது சிறுநீரகத்திலிருந்து கல்லீரலை சேதப்படுத்தும் உடலின் அழுக்கு.
  • உணவில் அதிகப்படியான பியூரின்கள் இருப்பதால், சிறுநீரகங்கள் கழிவுகளை வடிகட்டத் தவறிவிடுகின்றன.
  • உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சிறுநீரகத்தின் வடிகட்டுதல் திறனை அதிகரிக்கிறது.
வாழ்க்கையை முடக்கும் யூரிக் அமில பிரச்சனை! தீர்வைத் தரும் ‘மேஜிக்’ ஜூஸ்! title=

யூரிக் அமில  பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பொதுவாக, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது சிறுநீரகத்திலிருந்து கல்லீரல் வரை பாதிக்கத் தொடங்கும். இதைத் தவிர்க்க, நம் அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். வழக்கமான உடற்பயிற்சியுடன், உணவு முறையை கடைபிடிப்பது நிவாரணத்தை கொடுக்கும். இருப்பினும்,  சில எளிய வீட்டு வைத்தியங்களையும் கடைபிடிப்பதன் மூலம் இந்த தொல்லையில் இருந்து விடுபடலாம். 

யூரிக் அமிலம் என்பது சிறுநீரகத்திலிருந்து கல்லீரலை சேதப்படுத்தும் உடலின் அழுக்கு. எனவே எந்தெந்த பச்சை இலைகளில் யூரிக் அமிலத்தை குறைக்கும் குணம் உள்ளது மற்றும் அதை எப்படி குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த மேஜிக் ஜூஸ்கள் எலும்புகளில் உறைந்திருக்கும் அழுக்கு யூரிக் அமிலத்தின் படிகங்களை உடைத்து, மூட்டு மற்றும் முழங்கால் வலியைக் குறைக்கும்.

புதினா இலை சாறு

புதினா சாறு குடிப்பது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. உணவில் அதிகப்படியான பியூரின்கள் இருப்பதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை வடிகட்டத் தவறிவிடுகின்றன. இதன் காரணமாக, யூரிக் அமிலம் எலும்புகளின் இடைவெளியில் படிகங்களாகவும், சிறுநீரகங்களில் கற்களாகவும் குவியத் தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், புதினா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!

புதினாவில் நல்ல அளவு இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளது. மேலும் இது வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட்டின் நல்ல மூலமாகும். புதினா இலைகளை உட்கொள்வது மற்றும் உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சிறுநீரகத்தின் வடிகட்டுதல் திறனை அதிகரிக்கிறது. தினமும் 12-15 புதிய புதினா இலைகளை உட்கொள்வதே சிறந்த வழி. புதினாவை ஜூஸாக அருந்தாலாம் மேலும், மூலிகை தேநீர், தயிர், ஸ்மூத்தி, சாலட், சூப் போன்றவற்றில் கலந்தும் அவற்றை உட்கொள்ளலாம்.

எலுமிச்சை பானம்

அதிக யூரிக் அமிலம் உள்ளவர்களுக்கு கீல்வாதத்தைத் தடுக்க எலுமிச்சை சாறு உதவுகிறது. எலுமிச்சை சாறு யூரிக் அமில அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இது உடலை அதிக காரத்தன்மை கொண்டதாக மாற்ற உதவுகிறது. இது இரத்தம் மற்றும் பிற திரவங்களின் pH அளவை சிறிது அதிகரிக்கிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது.

தினமும் உணவுக்கு முன் ஒரு டம்ளர் எலுமிச்சை நீர் குடிக்கலாம். 2017 ஆம் ஆண்டு ஆய்வில் எலுமிச்சை சாறு இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அதிக யூரிக் அமில அளவு கொண்ட பெரியவர்கள் 6 வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய எலுமிச்சை சாற்றை (ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சைக்கு சமமான அளவு) குடித்து வந்தால், அவர்களின் யூரிக் அமிலம் உடலில் இருந்து அகற்றப்படும்.

வெற்றிலை சாறு

வெற்றிலை யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில், வெற்றிலை சாறு கொடுக்கப்பட்ட நபர்களுக்கு  யூரிக் அமிலத்தின் அளவு 8.09mg/dl இலிருந்து 2.02mg/dl ஆக குறைந்தது தெரியவந்தது. வெற்றிலையில் யூஜினால் உள்ளது, இதன் காரணமாக அவை யூரிக் அமிலத்தை மட்டுமின்றி கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.

சாப்பிட்ட பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை வெற்றிலையை மென்று சாப்பிடுங்கள் அல்லது அதன் சாறு குடிக்கத் தொடங்குங்கள், ஆனால் அதனுடன் எந்த வகையான புகையிலையையும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு: வேண்டுமென்றால் வெற்றிலை, புதினா இலைகளை எலுமிச்சை நீரில் கலந்து அருந்தலாம், பலன் தரும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News