Uric Acid அதிகரித்தால் அவதிதான்!! இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும்

Uric Acid: உங்கள் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2022, 07:04 PM IST
  • ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தி மற்றும் நச்சு நீக்கியாகும்.
  • இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அழிக்கும் பணியை செய்கிறது.
  • இதில் உள்ள அமிலம் யூரிக் அமிலத்தை கட்டிப்படுத்த உதவுகிறது.
Uric Acid அதிகரித்தால் அவதிதான்!! இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும் title=

யூரிக் அமிலம்: இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. இன்று, இந்த நோய் மக்களிடையே மிகவும் பொதுவான ஒரு நோயாக மாறிவிட்டது. சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை திறம்பட அகற்ற முடியாமல் போகும்போது யூரிக் அமில அளவுகள் அடிக்கடி அதிகரிக்கும். அதிகமாக சாப்பிடுதல், அதிக எடை, நீரிழிவு நோய், சில டையூரிடிக் மருந்துகளை உட்கொள்வது மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை சிறுநீரகங்களால் யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போவதற்கான சில காரணங்களாகும் .

யூரிக் அமிலத்தின் இயல்பான அளவு என்னவாக இருக்க வேண்டும்?

யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நோய்களில் முக்கியமாக கீல்வாதம், இதய நோய், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அடங்கும். ஆண்களில் 3.4-7.0 மி.கி யூரிக் அமிலம், பெண்களில் 2.4-6.0 மி.கி ஆபத்தற்ற அளவாக பார்க்கப்படுகின்றது. உங்கள் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தி மற்றும் நச்சு நீக்கியாகும். இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அழிக்கும் பணியை செய்கிறது. இதில் உள்ள அமிலம் யூரிக் அமிலத்தை உடைக்க உதவுகிறது. இதற்கு, 1 டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைக்கவும். இப்போது இந்த கரைசலை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கவும். யூரிக் அமிலம் கட்டுக்குள் வரும் வரை இதை தொடர்ந்து செய்யுங்கள்.

மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகரித்தால் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: இப்படி கட்டுப்படுத்தலாம் 

எலுமிச்சை

ஒரு ஆய்வின் படி, எலுமிச்சை நமது உடலின் கார விளைவை அதிகரிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி யூரிக் அமிலத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவும். எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால், ஒரு வாரம் கழித்து, அதன் விளைவு தெரியத் தொடங்கும். 

ஆலிவ் எண்ணெய்

யூரிக் அமிலத்தைக் குறைக்க ஆலிவ் எண்ணெய் உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ தவிர, வைட்டமின் கே, இரும்பு, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை யூரிக் அமில அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. காய்கறிகளை சமைக்க நெய் அல்லது பிற சமையல் எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும்.

பேக்கிங் சோடா மற்றும் யூரிக் அமிலம்

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த பேக்கிங் சோடா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலி பிரச்சனையையும் இது நீக்குகிறது. இது கார அளவை பராமரித்து யூரிக் அமிலத்தை கரைக்கிறது. இதைப் பயன்படுத்த, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது அரை தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலந்து, பகலில் ஒவ்வொரு 2-4 மணிநேரமும் குடிக்கவும். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பலன் தெரியும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அதிக புரதச்சத்து நிறைந்த உணவு என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்பவரின் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. ஆகையால் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் உணவில் புரதத்தின் அளவைக் குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளத் தொடங்க வேண்டும். பருவகால பழங்கள், கீரை வகைகள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த நார்ச்சத்தை நீங்கள் பெறலாம். உலர் பழங்களில், குறிப்பாக பேரீச்சம்பழம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு அதிகபட்ச நார்ச்சத்து கிடைக்கும்.

மேலும் படிக்க | வாழ்க்கையை முடக்கும் யூரிக் அமில பிரச்சனை! எளிய வீட்டு வைத்தியங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News