யூரிக் அமிலத்தைக் குறைக்க எளிய வழிமுறை! இந்த ‘இலை’ இருந்தால் பிரச்சனை இல்லை

Uric Acid Cure: யூரிக் அமிலத்தை வெளியேற்றும் அற்புத இலை இது! இதை சாப்பிட்டால் இந்த நோய் மீண்டும் வராது! கிச்சன் மசாலா செய்யும் மந்திரம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 6, 2023, 10:10 PM IST
  • பியூரின் என்ற கழிவுகளை வெளியேற்றும் பிரியாணி இலை
  • பிரியாணி இலை உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியைக் குறைக்க உதவுகிறது
  • யூரிக் அமில பிரச்சனைக்கு தீர்வளிக்கும் பிரியாணி இலை
யூரிக் அமிலத்தைக் குறைக்க எளிய வழிமுறை! இந்த ‘இலை’ இருந்தால் பிரச்சனை இல்லை title=

யூரிக் அமில அளவு: யூரிக் அமிலம் என்பது உடலால் உருவாக்கப்படும் விஷம் போன்றது. இது அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகரிப்பது ஒரு பிரச்சனையல்ல, யூரிக் அமில பிரச்சனையில், பியூரின்கள் பொதுவாக எலும்புகளின் நடுவில் குவிந்துவிடும். இதற்கு பிரிஞ்சி இலை உதவும். இந்த இலையை எப்போது, எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் யூரிக் அமிலப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 
நமது உடலால் பியூரினை சரியாக ஜீரணிக்க முடியவில்லை என்றால், அதன் திரட்சி எலும்புகளுக்கு இடையில் குவியத் தொடங்குகிறது. இதன் காரணமாக எலும்புகளுக்கு இடையே இடைவெளி ஏற்படும் நிலை கீல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், உடலின் எலும்புகளை நகர்த்துவதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

நாளடைவில் இந்தப் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த நோயினால் பல பிரச்சனைகள் இருந்தாலும், யூரிக் அமிலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும்.

மேலும் படிக்க | உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்படும் மருந்துகளாலும் சரிவிகித உணவுகளாலும் பியூரினின் அளவை பெருமளவு கட்டுப்படுத்தலாம். இதற்கு பிரிஞ்சி இலை மிகவும் உதவியாக இருக்கும்.

இந்திய உணவுகளில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலை, உணவின் சுவையை அதிகரிக்கிறது. பல ஆயுர்வேத பண்புகளைக் கொண்டுள்ள பிரிஞ்சி இலையில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. யூரிக் அமில பிரச்சனைக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அது எப்படி அதன் அற்புதத்தை காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

 பிரிஞ்சி இலையின் நன்மைகள்

பியூரின் என்ற கழிவுகளை வெளியேற்ற பிரிஞ்சி இலை உதவுகிறது  

பிரிஞ்சி இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலியைக் குறைக்க உதவுகிறது

 யூரிக் அமில பிரச்சனைக்கு தீர்வளிக்கும் பிரிஞ்சி இலை

சைஜிஜியம் பாலியாந்தம் என்றும் அழைக்கப்படும் பிரிஞ்சி இலை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: 7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாக குறைப்பது எப்படி
.
பிரிஞ்சி இலைகளை எப்படி பயன்படுத்துவது?
யூரிக் அமிலத்தை குறைக்க பிரிஞ்சி இலை உதவுகிறது என்பது தெரிந்தாலும், அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

பிரிஞ்சி  இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதித்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், பியூரின் அளவு சீராகும்.
இந்த நீரைக் குடிப்பதால், உடலிலும், எலும்புகளுக்கிடையே தேங்கியுள்ள பியூரின் கற்கள் கரையும்.
பியூரின் கற்களை கரைக்கும் பிரிஞ்சி இலை, அதை உடலில் இருந்து நீக்குகிறது.
பிரியாணி இலை என்று அறியப்படும் பிரிஞ்சி இலை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன, இது உடலில் வெப்பத்தை சீர்ப்படுத்தி கீல்வாத நோயினால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவலைப்படாம மாம்பழம் சாப்பிடலாம்... ‘இதை’ மட்டும் கவனத்தில் கொள்ளவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News