அடிவயிற்று கொழுப்பை உடனே குறைக்கணுமா? தினசரி இத மட்டும் பண்ணுங்க போதும்!

How To Reduce Belly Fat: தற்போது பலருக்கும் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. சரியான உணவு முறை இல்லாதது காரணமாக அமைகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 24, 2024, 11:22 AM IST
  • இளைஞர்கள் தங்கள் உணவைப் பற்றி சிந்திப்பதில்லை.
  • அவர்கள் விரும்பியதை சாப்பிடுகிறார்கள்.
  • இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது.
அடிவயிற்று கொழுப்பை உடனே குறைக்கணுமா? தினசரி இத மட்டும் பண்ணுங்க போதும்! title=

How To Reduce Belly Fat: இன்றைய வேகமான உலகில் பலரும் தங்களது உணவுகளை பற்றி சிந்திப்பதில்லை. கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுகின்றனர்.  பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை கலந்த பானம், துரித உணவு, மது போன்றவற்றை அதிகமாக சாப்பிடுகின்றனர்.  இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் பல இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பாடும் ஆபத்து உள்ளது.  மேலும் தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். மோசமான உணவு பழக்கத்தில் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு தான்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி அதிக நார்ச்சத்து மிக்க சில காய்கறிகள்..!

துரித உணவுகள் வயிற்றில் தேவையற்ற கொழுப்புகளை சேர்விட்டு தொப்பையை ஏற்படுத்துகிறது.  தொப்பை கொழுப் சேர சில முக்கியமான காரணங்களில் ஒன்று ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது ஆகும். மேலும் மோசமான உணவுமுறை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மரபியல் போன்றவையும் காரணமாக அமைகிறது.  இதனால் பலரும் பல விதமான சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.  இவற்றை சரி செய்ய சில விஷயங்களை தினசரி பின்பற்றினால் போதும். 

ஆரோக்கியமான உணவு அவசியம்

தினசரி சாப்பிடும் உணவில் நிறைய காய்கறிகள், முழு தானியங்கள், நல்ல அளவு புரதம் கொண்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்வது நல்லது. அதே சமயம் பதப்படுத்தப்பட்ட உணவு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் மற்றும் நிறைவுற்ற டிரான்ஸ் கொழுப்பு பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

தூக்கம் அவசியம் 

தினசரி இரவு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். கம்மியான அளவு தூக்கம் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீர்குலைத்து உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.  இதனால் இரவில் சீக்கிரம் சாப்பிட்டு தூங்குவது நல்லது.

அதிக மது ஆபத்து 

அனைத்து வகை மதுபானத்திலும் ஒரு கிராமுக்கு 4 முதல் 7 கலோரிகள் உள்ளன. அதே போல பீரில் 100 கிராமுக்கு 43 கலோரிகளுக்கு மேல் உள்ளது. நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட பானமான இதில் அதிக சர்க்கரை மற்றும் இரசாயனங்கள் உள்ளது. இதில் கலோரிகள் கிட்டத்தட்ட 295 வரை இருக்கும். நீங்கள் எவ்வளவு அதிகமாக மது அருந்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் உடலில் கலோரிகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு உடலுக்கு தேவையைவிட அதிக கலோரிகள் இருந்தால், உடல் எடையை அதிகரிக்கும். இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். 

உடற்பயிற்சி அவசியம்

தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அல்லது வாரத்தில் ஐந்து நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்வது நல்லது. 
இதில்  நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.  அதே சமயம் டிவி அதிக நேரம் பார்ப்பதால் உடல் எடை கூடும் என்ற அதிர்ச்சி தகவலும் உள்ளது.  ஒன்றரை மணி நேரம் டவி பார்த்தால் 3.5 கன சென்டிமீட்டர் கூடுதல் வயிற்று கொழுப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.  நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

தினசரி உணவு முறை

நீங்கள் அடிக்கடி கடை உணவுகளை சாப்பிடுபவராக இருந்தால் உங்களுக்கு அந்த உணவில் எவ்வளவு புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உள்ளது என்று தெரியாது. கடை உணவுகளில் பயன்படுத்தப்படும் ஆயில் மற்றும் மாசால கண்டிப்பாக உடலுக்கு நல்லது இல்லை. முடிந்தவரை இயற்கையான மற்றும் ஆர்கானிக் உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது.  கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வயசான காலத்தில் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா? அப்போ இதைசெய்யுங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News