கேரட்டில் கூட பக்கவிளைவுகளா!! அதிகமா சாப்பிட்டா ஆபத்து!!

Health Tips: குளிர்காலத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சில காய்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு நம்மை ஆற்றலோடும் இருக்கச்செய்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2024, 05:28 PM IST
  • கேரட்டின் மஞ்சள் பகுதி சூடாக இருக்கும்.
  • இதை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் உஷ்ணமும், தொண்டையில் எரிச்சலும் ஏற்படும்.
  • கேரட்டை அதிகமாக சாப்பிடுவது பல்வலியை ஏற்படுத்தும்.
கேரட்டில் கூட பக்கவிளைவுகளா!! அதிகமா சாப்பிட்டா ஆபத்து!! title=

Health Tips: பருவகால பழங்கள் மற்றும் காய்களை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இவை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் நம் உடலுக்கு அளிக்கின்றன. தற்போது குளிர் காலம் துவங்கிவிட்டது. இந்த காலத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை பேண சில காய்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சில காய்கள் நம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு நம்மை ஆற்றலோடும் இருக்கச்செய்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

குளிர்காலத்தில் (Winter) மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் காய்களில் கேரட்டும் ஒன்று. ஆண்டு முழுதும் கேரட் கிடைத்தாலும், குளிர்காலத்தில் கிடைக்கும் கேரட்டின் சுவையும் ஆரோக்கிய குணங்களும் மிக அதிகம். இந்த காலத்தில் கேரட்டை பொரியல், கூட்டு, கோஸ்மல்லி, அல்வா, ஊறுகாய் என பல வழிகளில் உட்கொள்கிறோம். கேரட்டில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கேரட்டை அதிகமாக சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும் (Side Effects) என்பது பலருக்கு தெரிவதில்லை. 

கேரட்டை (Carrot) அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். குளிர்காலத்தில் மக்கள் கேரட்டை அதிகம் சாப்பிடுவார்கள். கேரட் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், ​​​​அதை அதிகமாக சாப்பிடுவதால் தீமைகளும் அதிகம் ஏற்படுகின்றன. கேரட்டை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம். 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட்டை சாப்பிடக்கூடாது

- இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை (Blood Sugar Level) பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அதிகமாக சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள் கேரட் சாப்பிடும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். 

- தூக்க பிரச்சனை (Sleep problem) உள்ளவர்கள் கண்டிப்பாக கேரட்டை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் படிக்க || வெந்தயம் மூலம் உடல் எடை குறைய, இந்த வழிகளில் அதை உட்கொள்ளலாம்

- கேரட்டின் மஞ்சள் பகுதி சூடாக இருக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் உஷ்ணமும், தொண்டையில் எரிச்சலும் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

- கேரட்டை அதிகமாக சாப்பிடுவது பல்வலியை ஏற்படுத்தும். கேரட்டின் மஞ்சள் பகுதி உங்கள் பற்களை அதிக அளவில் பலவீனப்படுத்தும். ஆகையால் பல் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அதிகமாக சாப்பிடக்கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கேரட்டை அதிகமாக சாப்பிடக்கூடாது

கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். இதன் காரணமாக உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். கேரட்டில் நார்ச்சத்துடன் அதிக கரோட்டினும் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வது சருமத்தின் நிறத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். உடலில் கரோட்டின் அளவு அதிகரித்தால் சருமத்தின் மஞ்சள் நிறமும் அதிகரிக்கும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக கேரட் சாப்பிடக்கூடாது. ஏனெனில் கேரட் அதிகம் சாப்பிட்டால் பாலின் சுவையே மாறிவிடும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News