உறுப்பு தானம் செய்ய வயது ஒரு பொருட்டல்ல!

Last Updated : Sep 6, 2017, 05:36 PM IST
உறுப்பு தானம் செய்ய வயது ஒரு பொருட்டல்ல! title=

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பதினான்கு மாதங்களே ஆனா குழந்தையின் உடல் உறுப்புகள் தனமாக அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை சோம்நாத் ஷஹா, வீட்டில் விளயாடிக் கொண்டிரந்த பொது மாடியில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

தலையில் அடிப்பட்டு மண்டையில் ஏற்பட்ட அதிகளவு எலும்பு முறிவு காரணமாக அவர் மூளை சாவு அடைந்ததாக சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் இவரது உடல் உறுப்புக்கள் தானமாக அளிக்க அவரது பெற்றோர் முடிவுசெய்தனர்.

அதன்படி இவரது இதயம் மும்பையை சேர்ந்த 3.5 வயது குழந்தை ஒருவருக்கும், இவரது சிறுநீரகம் பானச்காந்தவை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் உருப்ப்பு மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் சிறு வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெயரை சோம்நாத் பெற்றுள்ளார்.

Trending News