மோடி அரசின் 10 ஆண்டு கால "தோல்விகள்" -கருப்பு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்

Congress Released Black Paper: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி "கருப்பு அறிக்கையை" வெளியிட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 8, 2024, 02:02 PM IST
மோடி அரசின் 10 ஆண்டு கால "தோல்விகள்" -கருப்பு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் title=

Delhi News In Tamil: மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று கருப்பு அறிக்கையை (Black Paper) வெளியிட்டது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் கீழ் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான அறிக்கை தான் இது என்று காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை

கருப்பு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கூறுகையில், "இன்று நாங்கள் மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி எப்போதெல்லாம் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைத்து வருகிறார். அதேநேரத்தில் நாங்கள் மோடி அரசின் தோல்விகளைக் சுட்டிக்காட்டினால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதன் காரணமாக தான் 'கருப்பு அறிக்கை' வெளியிட்டு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தோல்விகளை குறித்து நாட்டு மகளிடம் எடுத்துக்கூறுகிறோம் என்றார். 

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசாத மோடி அரசு -கார்கே

நாட்டின் மிக முக்கியப் பிரச்சனை வேலையில்லாத் திண்டாட்டம். அதைக்குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஆனால் மோடி அரசு ஒருபோதும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசுவதில்லை.

நாட்டில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்று மோடி அரசாங்கம் ஒருபோதும் பேசாது. அவர்கள் மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை தருவதில்லை. மாநிலங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிறார்கள், 

மேலும் படிக்க - Budget Session: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முழு விவரம்

மோடி அரசு ஜனநாயகத்தை அழிக்கிறது -கார்கே

நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கி உள்ளனர். அதன்மூலம் அவர்கள் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்.

மோடி சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுகிறார் -கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "நாட்டின் தற்போதைய பணவீக்கத்தை நேரு காலத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுகிறார்கள். மோடி அரசின் வேலைவாய்ப்பு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஏன் 3 கருப்புச் சட்டங்கள் (வேளாண் சட்டங்கள்) திரும்பப் பெறப்பட்டன? எந்த பதிலும் இல்லை. 

எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன? -கார்கே கேள்வி

ராஜ்யசபாவில் பேசும் போது, ​​பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பிரதமர் பேசியிருந்தார். எங்க, எப்பொழுது, எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன என்பதைக் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

மேலும் படிக்க - தென் மாநிலங்களுக்கு தொடரும் அநீதி.. தனி நாடு கோரிக்கைக்கு எங்களை தள்ளாதீர்கள் -கர்நாடகா எம்.பி

கருப்பு உடைகளை அணிந்து வருவது நல்லது -பிரதமர் மோடி

காங்கிரஸின் கருப்பு அறிக்கை குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கறுப்பு உடையில் பேஷன் ஷோவை பார்க்க வாய்ப்பு சபைக்கு கிடைத்துள்ளது. கண் திருஷ்டி படாமல் இருக்க கருப்பு மை வைத்துக்கொள்ளவது போல, கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு செய்த சாதனைகள் மீது கண் திருஷ்டி படாமல் இருக்க, "கார்கே ஜி கருப்பு உடை அணிந்து வந்துள்ளார். உங்களை போன்றவர்கள் கருப்பு உடைகளை அணிந்து வருவது நல்லது தான். 

மத்திய அரசு "வெள்ளை அறிக்கை" வெளியிடும்

2014 ஆம் ஆண்டுக்கு முன்பும், அதற்குப் பின்னரும் இந்தியப் பொருளாதாரச் சூழலுக்கு இடையேயான வேறுபாட்டை விவரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு "வெள்ளை அறிக்கை" தாக்கல் செய்யலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க - PM Modi: இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நேரு... மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு!

பாஜக அரசு நிலைமையை சமாளித்தது -ஜெயந்த் சின்ஹா

நிதிநிலைக்குழு தலைவரும் பாஜக அமைச்சரும் ஜெயந்த் சின்ஹா ​​கூறுகையில், "2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலையை அரசின் வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு பாஜக அரசு எப்படி நிலைமையை மாற்றியது என்பதைக் காட்டும் என்றும் அவர் கூறினார்.

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருநாள் நீட்டிப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தகவலை ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர்

லோக்சபா தேர்தலுக்கு முன், தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜ்யசபா உறுப்பினர்கள் 56 பேரின் பதவிக்காலமும் இன்றுடன் முடிவடைகிறது.

மேலும் படிக்க - அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கேஎஸ் அழகிரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News