மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சாபஹர் துறைமுக ஒப்பந்தம்...!

இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 14, 2024, 01:13 PM IST
  • சபஹர் என்பது ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு ஆழமான துறைமுகமாகும்.
  • பெரிய சரக்குக் கப்பல்களுக்கு சபாஹர் துறைமுகம் எளிதான மற்றும் பாதுகாப்பான அணுகலை வழங்குகிறது.
  • சபஹர் துறைமுகம் ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சாபஹர் துறைமுக ஒப்பந்தம்...! title=

சாபஹர்  துறைமுகம் தொடர்பாக இந்தியா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை, இரு நாடுகளும் 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (ஐபிஜிஎல்) துறைமுகத்தில் 120 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இந்தியாவும் 250 மில்லியன் டாலர்களுக்கு சமமான கிரெடிட் விண்டோ வசதியை ரூபாயில் வழங்கியுள்ளது. துறைமுகம் தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களில் இந்தகிரெடிட் விண்டோ பயன்படுத்தப்படும். 

சபஹர் என்பது ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு ஆழமான நீர் துறைமுகமாகும். இந்த ஈரானிய துறைமுகம் இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளது மற்றும் திறந்த கடலில் அமைந்துள்ளது. அதாவது, பெரிய சரக்குக் கப்பல்களுக்கு சபாஹர் துறைமுகம் எளிதான மற்றும் பாதுகாப்பான அணுகலை வழங்குகிறது. சபஹர் துறைமுகம் பல காரணங்களுக்காக இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்கான சாபஹர் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை 5  விஷயங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

1. சபஹர் துறைமுகம் ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தின் மூலம் இந்தியா மத்திய ஆசியாவிற்கான நேரடி அணுகலைப் பெறுகிறது. ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ள சபஹர் துறைமுகம், பாகிஸ்தானைத் தவிர்த்து, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வர்த்தகப் பாதையாக மாறும். பாகிஸ்தானைக் கடந்து இந்தியா தனது வர்த்தகப் பாதைகளை பன்முகப்படுத்த முடியும். பாகிஸ்தானைச் சார்ந்திருப்பதையும் குறைக்கலாம். சபஹர் துறைமுகம் குறிப்பாக நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகளுடனான வர்த்தகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தியா மற்றும் ஈரான் இடையேயான ஒப்பந்தத்தில் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) சாதகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் 7,200 கிலோமீட்டர் நீளமான நெட்வொர்க் ஆகும்.

2. இந்தியா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். சபஹர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும். போக்குவரத்து செலவுகளும் குறையும். இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேம்படும். இப்பகுதியில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மேலும் படிக்க | தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா! 

3.  சபஹர் துறைமுக ஒப்பந்தத்தை செய்துகொண்டதன் மூலம், மாறிவரும் புவிசார் அரசியல் நிலையிலும் தங்கள் உறவு வலுவடைந்து வருவதை இந்தியாவும் ஈரானும் காட்டியுள்ளன. அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும்,  நீண்ட காலமாக துறைமுகத்தின் வளர்ச்சியில் தடைகளை உருவாக்கி வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவும் ஈரானும் தங்களது பொருளாதார சுதந்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய நலன்களுக்காக இணைந்து செயல்படும் என்று தெரிவித்தன. சபஹர் துறைமுகத்தில் இந்திய செயல்பாடுகள் தொடங்கும் போது வர்த்தக இயக்கமும் மாறும்.

4. ஈரானின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெஹர்தாத் பசர்பாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, ​​'சபஹர்... பகுதியின் போக்குவரத்து வளர்ச்சியில் மையப் புள்ளியாக மாற முடியும். இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது குறித்து மும்பையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை கூறுகையில், 'இது துறைமுகத்தில் பெரிய முதலீட்டுக்கு வழி வகுக்கும்' என்றார்.

5. சபஹர் துறைமுகம் முழுமையாக செயல்படுவதால், அப்பகுதியில் வர்த்தக நடவடிக்கை கணிசமாக அதிகரிக்கும் என இரு நாடுகளும் கருதுகின்றன. இது முதலீட்டை துரிதப்படுத்தும் மற்றும் பிற நாடுகளும் சபாஹரை மாற்று வர்த்தக பாதையாக பார்க்க முடியும். 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஈரானுடனான தனது உறவை இந்தியா வலுப்படுத்தியது மட்டுமின்றி மத்திய ஆசியாவில் கால் பதித்துள்ளது. இந்த நடவடிக்கை பிராந்திய அரசியலில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. சாபஹர் துறைமுகத்தின் உதவியுடன் மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும்.

மேலும் படிக்க | எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை... ஒப்புக் கொண்ட மாலத்தீவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News