முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி...

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

Last Updated : May 27, 2019, 09:00 AM IST
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி... title=

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் தீவிர காந்திய பற்று கொண்டவருமான ஜவஹர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு  மே  27 ஆம் தேதி காலமானார். 

அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையெட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கின் மூலம் நேருவின் இரங்கலுக்கான அஞ்சலியை செலுத்தியுள்ளார். அதில் அவர் “ஜவஹர்லால் நேரு மறைந்த தினமான இன்று அவரது இரங்கலை நினைவுகூர்வோம். அவர் இந்த நாட்டுக்கு செய்த அளப்பரிய நன்கொடைகளை நினைத்து பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Trending News