'ஐய்யோ...' பிரபலத்தை பார்த்ததும் கூறிய பிரதமர் - ஏன் தெரியுமா?

PM Modi Meets Aiyyo Shraddha: பெங்களூருவில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை இன்று சந்தித்த நிலையில், அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2023, 07:24 PM IST
  • ஏரோ இந்திய கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • நடிகர்கள் யாஷ், ரிஷப் ஷெட்டியை பிரதமர் சந்தித்தார்.
'ஐய்யோ...' பிரபலத்தை பார்த்ததும் கூறிய பிரதமர் - ஏன் தெரியுமா? title=

PM Modi Meets Aiyyo Shraddha: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் ஏரோ இந்தியா கண்காட்சியை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து, கர்நாடகவை சேர்ந்த நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி, பெங்களூருவில் ராய் ராஜ் பவனில் சந்தித்தார்.

அதில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வின் ராஜ்குமார், கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, கிரிக்கெட் வீரர்கள், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மயாங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அவரின் மனைவி அர்ஷிதா ரெட்டி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். மேலும், சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் மாதம் ஊழியர்களுக்கு 3 பெரிய மாஸ் செய்தி

இந்த பிரபலங்கள் மத்தியில், சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படும் ஷரத்தா என்பவரையும் பிரதமர் மோடியை சந்தித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்குறைப்பு குறித்து இவர் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் வைரலானது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா உட்பட பல பயனர்களால் அந்த வீடியோ பகிரப்பட்டது.

இந்த வீடியோ மூலம் பல்வேறு தரப்பின் பாராட்டுகளை பெற்ற இவர், இதுபோன்ற பல்வேறு வீடியோக்களை மூலம் இவரை இன்ஸாடாகிராமில் 6.90 லட்சம் பேரும், ட்விட்டரில் 75 ஆயிரம் பேரும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், இவர் பிரதமரை சந்தித்த அனுபவம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
அதில்,"வணக்கம், ஆம் நான் நம் நாட்டின் பிரதமரை இன்று சந்தித்தேன். என் பார்த்து அவர் கூறிய முதல் வார்த்தை, 'ஐயோ'. என்னால் நம்ப முடியவில்லை, ஆகா... உண்மையிலேயே அவர் அதைதான் சொன்னார். அது உண்மையிலேயே நடந்துவிட்டது" என பதிவிட்டுள்ளார். ஷரத்தாவின் மிக பிரபலமான வசனமும், அவரின் சமூக வலைதள பெயரும் 'ஐய்யோ' என்பதாகும்.  

மேலும் படிக்க | இனி 225 நகரங்களில் உணவு டெலிவரி சேவை இல்லை! Zomato நிறுவனம் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News