ஓவர் எடை ஒரே வாரத்தில் குறைய இரவு இந்த பானங்களை குடிங்க போதும்

Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் இவற்றாலும் பலருக்கு பெரிய அளவில் எந்த பயனும் கிடைப்பதில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 4, 2024, 11:33 AM IST
  • வெந்தயம் மற்றும் தேனுடன் தண்ணீர்.
  • வெதுவெதுப்பான நீரில் தேன்.
  • எலுமிச்சை தண்ணீரில் கருப்பு உப்பு.
ஓவர் எடை ஒரே வாரத்தில் குறைய இரவு இந்த பானங்களை குடிங்க போதும் title=

Weight Loss Drinks: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படித்தி வரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டிருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள், அதாவது துரித உணவுகளின் பழக்கம் அதிகமாகி கொண்டு வருகின்றது. இவை எளிதாக கிடைப்பதாலும், இவற்றை செய்ய அதிக நேரம் எடுக்காது என்பதாலும் இவை மிகவும் பிரபலமாகி வருகின்றன. இவற்றில் சோடியம், கொழுப்பு ஆகியவை மிக அதிகமாக இருப்பதால் இவற்றால் பக்க விளைவுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிக்க இந்த உணவுகள் மிகப்பெரிய காரணங்களாகின்றன.

உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் இவற்றாலும் பலருக்கு பெரிய அளவில் எந்த பயனும் கிடைப்பதில்லை. சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்பு பானங்கள்

பலருக்கு ஒரு பெரும் சலாவாக இருக்கும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க சில பானங்கள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவை உடல் பருமனை குறைப்பதோடு, இவற்றின் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது ஒரு கூடுதல் நன்மை. இரவு தூங்கும் முன் இவற்றை தண்ணீருடன் சேர்த்து உட்கொண்டால் எடை இழப்பில் பெரிய அளவில் நன்மை கிடைக்கும். அந்த பானங்கள் பற்றி இங்கே காணலாம். 

எடை இழப்புக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் (Home Remedies For Weight Loss)

வெந்தயம் மற்றும் தேனுடன் தண்ணீர்: வெந்தயத்தை (Fenugreeek) தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அந்த தண்ணீரை தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் (Weight Loss). வெந்தயத்தில்அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | வெயில் காலத்தில் இந்த மசாலாப் பொருட்கள் சேர்ப்பதை தவிருங்கள்..!

கிரீன் டீ: கிரீன் டீயில் (Green Tea) அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன. இரவில் தூங்கும் முன் இதை குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். 

வெதுவெதுப்பான நீரில் தேன்: வெதுவெதுப்பான நீரில் தேன் (Honey) கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. தேனில் இருக்கும் பண்புகள் உடலின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுகின்றன.

எலுமிச்சை தண்ணீரில் கருப்பு உப்பு: எலுமிச்சை நீரில் கருப்பு உப்பு கலந்து குடிப்பதால் எடையை வேகமாக குறைக்கலாம். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் எளிதாக வெளியேறும். தொப்பை கொழுப்பை குறைத்து கலோரிகளை எரிக்க இது பெரிதும் உதவுகிறது. 

எலுமிச்சை நீர்: எலுமிச்சை (Lemon) நீரில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவுகின்றது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கோடையில் தினமும் எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்... காரணம் இது தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News