ரயிலில் பைக்கை பார்சல் செய்து அனுப்ப எவ்வளவு செலவாகும்? முழு விவரம்!

Bike Transfer from Train: ரயிலில் நமது இரு சக்கர வாகனத்தை பார்சல் செய்து அனுப்ப முடியும்.  இதற்கு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 18, 2023, 07:42 AM IST
  • ரயிலில் வண்டி அனுப்ப ஆவணங்கள் தேவை.
  • பார்சல் செய்வதற்கு ரூ.500 செலவாகலாம்.
  • முறையான சரிபார்ப்பிற்கு பின்னரே அனுப்பப்படும்.
ரயிலில் பைக்கை பார்சல் செய்து அனுப்ப எவ்வளவு செலவாகும்? முழு விவரம்! title=

Bike Parcel in Train: பல சமயங்களில் வேலை மற்றும் பிற தேவைகளுக்காக ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்ல வேண்டி இருக்கும்.  அதிக திறன் கொண்ட வண்டியாக இருந்தால் சிலர் சாலையில் ஓட்டி செல்கின்றனர்.  ஸ்கூட்டி அல்லது குறைந்த சிசி கொண்ட வண்டியாக இருந்தால் பார்சல் மூலம் தான் கொண்டு செல்ல முடியும்.  இதற்காக தனியார் பார்சல் நிறுவனத்தை நாடினால், கூடுதல் தொகையை கொடுக்க வேண்டி இருக்கும்.  ஆனால் இந்திய ரயில்வேயின் மூலம் மிகக் குறைந்த செலவில் வாகனத்தை பார்சல் செய்து அனுப்ப முடியும்.  ரயில்வே இந்த வசதியை மக்களுக்காக  வழங்குகிறது. இந்த செயல் மூலம் உங்கள் வண்டியை ஒரு ஊரில் இருந்து, மற்றொரு ஊருக்கு லக்கேஜ் அல்லது பார்சல் வடிவில் அனுப்ப முடியும்.  

மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த தொகைக்கு மேல் போட்டாலோ, எடுத்தாலோ வருமான வரி நோட்டீஸ் வரும்

லக்கேஜ் முறை என்றால் பயணிகள் செல்லும் ரயிலில் வண்டி கொண்டு செல்லப்படும், பார்சல் என்றால் சரக்குகளை கொண்டு செல்லும் ரயில் என்று அர்த்தம். ரயிலில் வண்டியை கொண்டு செல்ல ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு விதங்களிலும் நீங்கள் புக் செய்து கொள்ளலாம்.  அதற்காக நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் மற்றும் என்ன என்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

ரயிலில் பைக்கை பார்சல் செய்ய முதலில் உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று, கவுண்டரில் கேட்டால் பார்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு வழங்கப்படும். தகவலைப் பெற்ற பிறகு, நீங்கள் பார்ம் பில் செய்து, அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.  அதிகாரிகள் சரிபார்ப்பின் போது அசல் மற்றும் நகல் தேவைப்படும். ரயில்வே ஊழியர்கள் பார்சல் செய்வதற்கு முன் பைக் அல்லது ஸ்கூட்டியின் பெட்ரோல் டேங்கை சரிபார்ப்பார்கள். பெட்ரோல் டேங்கை காலி செய்த பிறகே பார்சலுக்கான பேக்கிங் செய்யப்படும்.

நீங்கள் பைக்கை அனுப்ப வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்யுங்கள். பார்சலில் அனுப்ப முக்கியமாக பைக் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற உங்களின் அடையாள அட்டையும் பார்சலுக்கு இணைக்கப்படும். ஹெட்லைட்கள் மற்றும் சீட் நன்றாக பேக் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்கவும். டேங்கில் பெட்ரோல் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

எவ்வளவு செலவாகும்

ரயில்வே மூலம் பைக்கை அனுப்புவதற்கான கட்டணம் அதன் எடை மற்றும் தூரத்திற்கு ஏற்ப கணக்கிடப்படுகிறது. பார்சல்களை விட பைக்கை கொண்டு செல்வதற்கான லக்கேஜ் கட்டணம் அதிகம். 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பைக்கை அனுப்புவதற்கான சராசரி கட்டணம் பொதுவாக ரூ.1200 ஆகும். இருப்பினும், பைக்கின் தூரம் மற்றும் எடையைப் பொறுத்து வித்தியாசம் இருக்கலாம். இது தவிர, பைக்கை பேக் செய்த 300 முதல் 500 ரூபாய் செலவாகும். உங்கள் பெயரில் பைக் இருந்தால் மட்டும் தான் பார்சலில் அனுப்ப முடியும் என்பது இல்லை.  உங்கள் புகைப்பட ஐடியைப் பயன்படுத்தி வேறொருவரின் பெயரில் பைக்கை முன்பதிவு செய்யலாம். ஆனால் நீங்கள் பைக் அல்லது ஸ்கூட்டரின் ஆர்சி மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். பார்சல் முன்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்க | தங்க பத்திரம்: மலிவு விலையில் தங்கத்தில் முதலீடு செய்ய சூப்பர் வாய்ப்பு.. டிசம்பர் 18 தயாரா இருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News