Post Office அசத்தல் திட்டம்: வட்டியிலேயே பம்பர் லாபம், திட்ட முடிவில் சூப்பர் வரவு

Post Office Time Deposit Scheme: போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் கணக்கை 5 ஆண்டுகளுக்குத் தொடங்கினால், அதற்கு வரிச் சலுகையும் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2023, 05:09 PM IST
  • இதன் மெச்யூரிட்டி 1-5 ஆண்டுகள்.
  • வட்டியாக மட்டுமே 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • 5 வருட கால வைப்புத்தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்.
Post Office அசத்தல் திட்டம்: வட்டியிலேயே பம்பர் லாபம், திட்ட முடிவில் சூப்பர் வரவு title=

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கு: நீங்கள் நிலையான வருமானம் கொண்ட முதலீட்டாளராக இருந்தால், தபால் அலுவலகம் செயல்படுத்தும் பல திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் ஒரு திட்டத்தின் பெயர் டைம் டெபாசிட். இந்திய அஞ்சல் துறையின் சிறப்பான திட்டம் இது. இந்த திட்டத்தில், டெபாசிட் செய்பவர்களுக்கு 7.5 சதவீதம் வரை பம்பர் வட்டி கிடைக்கும். இது தவிர, வரியைச் சேமிக்கவும் இது உதவுகிறது. 

இந்த திட்டத்தில் மொத்தமாக 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், வட்டியாக சுமார் 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இது தவிர, அசல் தொகையான 2 லட்சமும் திட்ட நேரம் முடிந்ததும் திருப்பித் தரப்படும். இந்தத் திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

இதன் மெச்யூரிட்டி 1-5 ஆண்டுகள் 

இந்தியா போஸ்ட்டின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, தபால் அலுவலக நேர வைப்பு கணக்கை 4 வெவ்வேறு காலங்களுக்கு திறக்கலாம். வட்டி விகிதம் 1 வருடத்திற்கு 6.8%, 2 ஆண்டுகளுக்கு 6.9%, 3 ஆண்டுகளுக்கு 7% மற்றும் 5 ஆண்டுகளுக்கு 7.5% ஆகும். வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படுகிறது மற்றும் காலாண்டுக்கு கணக்கிடப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதையும் தாண்டி ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

வட்டியாக மட்டுமே 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கால்குலேட்டரின் படி, ஒரு முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் 2 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், அவருக்கு மொத்தம் ரூ. 89,990 வட்டி கிடைக்கும். ஐந்தாண்டு காலம் முடிவடைந்ததும், அசல் தொகையான ரூ. 2 லட்சத்தையும் திரும்பப் பெறுவார்.

மேலும் படிக்க | IRCTC பயண காப்பீடு... 35 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு... முழு விபரம் இதோ!

5 வருட கால வைப்புத்தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும்

போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் கணக்கை 5 ஆண்டுகளுக்குத் தொடங்கினால், அதற்கு வரிச் சலுகையும் கிடைக்கும். முதலீட்டுத் தொகையில் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெறலாம். இந்த திட்டத்தின் பிற அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது ஒருவராக அல்லது கூட்டாகத் திறக்கப்படலாம். ஒரு முறை முதலீடு செய்தால் குறைந்தது 6 மாதங்களுக்குப் பிறகுதான் மெச்யூரிட்டிக்கு முந்தைய மூடல் (ப்ரீ-மெச்யூர் க்ளோசர்) சாத்தியமாகும்.

முதலீட்டாளர்கள் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம்

ஒரு முதலீட்டாளர் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கை நீட்டிக்க விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகு, அவர் அதை அதே காலத்திற்கு நீட்டிக்க முடியும். ஒரு முதலீட்டாளர் தனது பெயரில் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆண்டு அடிப்படையில் பெற்ற வட்டித் தொகையை எடுக்காவிட்டாலும், அது டெட் மணியாக கணக்கில் அப்படியே இருக்கும். இதில் தனி வட்டி கிடைக்காது. 

கூடுதல் தகவல்

இந்தியா போஸ்ட் டெபாசிட் திட்டங்கள் 

இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | எளிதில் வேலை கிடைக்க எந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.? இந்த டிப்ஸை படிங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News