இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!

கேவிபி திட்டத்தில் நீங்கள் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் அடுத்த 124 மாதங்களில் அது இரட்டிப்படைந்து உங்களுக்கு ரூ.2 லட்சமாக கிடைக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 28, 2022, 06:52 AM IST
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் சிறப்பான திட்டங்களாகும்.
  • அஞ்சலகத்தின் சிறப்பான, பிரபலமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்ரா.
  • அஞ்சல் அலுவலகத்தில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன.
இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்! title=

அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற திட்டங்கள் உங்களுக்கு 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை அள்ளித்தரக்கூடிய சிறப்பான திட்டங்களாகும்.  இந்த திட்டங்களை போலவே உங்களுக்கு சிறந்த வட்டியை தரக்கூடிய அஞ்சலகத்தின் சிறப்பான மற்றும் பிரபலமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி), இந்த திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுதோறும் 6.9 சதவீத கூட்டு வட்டி கிடைக்கும்.  கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) எனப்படும் இந்த சிறு சேமிப்பு திட்டமானது ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பணத்திற்கு ஒரு பாதுகாப்பையும் வழங்குகிறது.  

மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஞ்சல் அலுவலகத்தில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன.  அதுமட்டுமல்லாது இந்த திட்டங்களில் உங்களுக்கு நிரந்தர வருமானம், அதிக விகிதத்தில் வட்டி மற்றும் வரி சலுகைகளும் கிடைக்கிறது.  பல முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு அதிகளவில் வட்டி விகிதத்தை வழங்கலாம், அதேசமயம் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்து அதில் தேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு முதலீடு செய்வது சிறந்தது.  கேவிபி திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய தொகையானது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் அதாவது 124 மாதங்களில் வட்டியுடன் சேர்த்து இரட்டிப்படையும்.  உதாரணமாக இப்போது இந்த கேவிபி திட்டத்தில் நீங்கள் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் அடுத்த 124 மாதங்களில் அது இரட்டிப்படைந்து உங்களுக்கு ரூ.2 லட்சமாக கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு, ஊதியத்தின் முழு கணக்கீடு இதோ

இந்த கேவிபி திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ. 1000 டெபாசிட் செய்யலாம், பின்னர் ரூ.100-ன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம்.  இத திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம், இதில் அதிகபட்ச வரம்பு இல்லை.  அதேபோல மற்ற முதலீடு திட்டங்களை போல் அல்லாமல் இந்த கேவிபி திட்டத்தில் நீங்கள் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம்.  இதில் டெபாசிட் செய்யப்படும் தொகை நிதி அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலத்தின்படி முதிர்ச்சியடைகிறது, இடையில் பணத்தை திரும்ப பெற விரும்பினாலும் செய்துகொள்ளலாம்.  கேவிபி திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவரின்  நாமினி/சட்டப்பூர்வ வாரிசுக்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Best FD Rates: இந்த வங்கிகளில் எஃப்டி போட்டால், பணம் இரட்டிப்பாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News