குழந்தைகளின் நலனுக்கு நல்ல காப்பீடு திட்டம்... தினமும் ரூ.6 போதும் - இன்றே தொடங்குங்கள்!

Post Office Scheme: அஞ்சல் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே பணத்தைச் சேமிக்கலாம். இந்தக் காப்பீட்டுத் திட்டம் குறித்து இங்கே காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 9, 2023, 03:09 PM IST
  • தினமும் 6 முதல் 18 ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம்.
  • ஆனால், இதில் பெற்றோர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு உள்ளது.
குழந்தைகளின் நலனுக்கு நல்ல காப்பீடு திட்டம்... தினமும் ரூ.6 போதும் - இன்றே தொடங்குங்கள்! title=

Post Office Scheme: பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், வருமானத்தைப் பொருட்படுத்தாமல் சேமிப்பது என்பது கடினமாகியுள்ளது. வருமானத்துக்கு ஏற்ப செலவுகளும் அதிகரித்து வருகின்றன. நீங்கள் பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி இப்போதில் இருந்தே சிந்திக்க வேண்டும். 

இப்போதிருந்தே உங்கள் குழந்தைகளுக்காகச் சேமிக்கத் தொடங்கவில்லை என்றால், வரும் நாட்களில் கல்வி மற்றும் இதர செலவுகளை ஏற்பாடு செய்வது மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த குழந்தை ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒரு நல்ல திட்டமாகும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: மாதம் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வருமானம், விவரம் இதோ

பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலகத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ. 6 முதலீடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே பணத்தைச் சேமிக்கலாம். இந்தக் காப்பீட்டுத் திட்டம் குறித்து இங்கே காணலாம். 

அஞ்சல் நிலையத்தில் குழந்தைகளுக்கான பால் ஜீவன் பீமா யோஜனாவை கொண்டு வந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் மட்டுமே இந்த திட்டத்தை வாங்க முடியும். இந்தத் திட்டத்தைப் பெற சில நிபந்தனைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, திட்டத்தைப் பெற விரும்பும் பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

5 முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசி வாங்க முடியும். அதாவது, பெற்றோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம், மூன்றாவது குழந்தைக்கு முதலீடு செய்ய முடியாது.

இந்தத் திட்டத்தில், உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு, இந்த பாலிசியில் தினமும் ரூ.6 பிரீமியமாக டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், 20 ஆண்டுகளுக்கு 18 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், நீங்கள் ரூ. 1 லட்சத்தை மொத்தமாகப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அகவிலைப்படி விதிகளில் மாற்றம், இனி புதிய ஃபார்முலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News