ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெரும் தபால் நிலையத்தின் அசத்தலான திட்டம்!

அஞ்சலக திட்டங்களில் தற்போது பிரபலமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும்.  போஸ்ட் ஆபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் திட்டமாகும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 19, 2022, 07:00 AM IST
  • அஞ்சலகம் வாயிலாக அரசாங்கம் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
  • இந்த வருமானம் அத்தகைய மக்களின் நல்வாழ்வுக்கு உதவிகரமாக அமைகிறது.
  • அஞ்சலக திட்டங்களில் சிறப்பானதாக கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும்.
ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெரும் தபால் நிலையத்தின் அசத்தலான திட்டம்! title=

இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பணத்தை மிச்சப்படுத்த இந்திய அஞ்சல் ஒரு பாதுகாப்பான மற்றும் சிறப்பான வழியாக இருக்கிறது.  அஞ்சலகம் வாயிலாக அரசாங்கம் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது, நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அஞ்சல் பல நம்பகத்தன்மையுள்ள சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது.  இதுபோன்ற சேமிப்பு திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் அத்தகைய மக்களின் நல்வாழ்வுக்கு உதவிகரமாக அமைகிறது, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் அஞ்சல் அலுவலகம் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது.  அஞ்சலக திட்டங்களில் தற்போது பிரபலமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி..ஒரே நேரத்தில் டிஏ, பதவி உயர்வு! 

 போஸ்ட் ஆபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் திட்டமாகும், இது ஐந்து வருட பாதுகாப்புக்குப் பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான வாய்ப்பாக உள்ளது.  இதன் மூலம் பாலிசிதாரர் 55, 58 அல்லது 60 வயது வரை குறைக்கப்பட்ட பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலம் பயனடையலாம்.   இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 19 முதல் 55 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000 மற்றும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.  இந்த திட்டத்தில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி கிடைக்கும், அதேசமயம் 5 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்திலிருந்து நீங்கள் விலகினால் உங்களுக்கு போனஸ் எதுவும் கிடைக்காது மற்றும் பாலிசி சரண்டர் செய்யப்பட்டால், குறைந்த காப்பீட்டுத் தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும்.

பிரீமியம் நிறுத்தம் அல்லது முதிர்வு தேதிக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் மாற்றும் தேதி வரவில்லை எனில், 59 வயது வரை எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றலாம்.  பிரீமியம் செலுத்தும் வயது 55, 58 அல்லது 60 ஆக இருக்கலாம்.  ஒரு பாலிசிதாரர், கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் வெறும் 50 ரூபாய் பங்களிப்பதன் மூலம் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறமுடியும்.  ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பாலிசியில் முதலீடு செய்தால், அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.50, பாலிசி முதிர்ச்சியடைந்த பிறகு அந்த நபர் ரூ.34.60 லட்சத்தை திரும்பப் பெறுவார்.  ஒரு முதலீட்டாளர் 55 ஆண்டு காலத்திற்கு ரூ.31,60,000ம், 58 ஆண்டு காலத்திற்கு ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டு காலத்திற்கு ரூ.34.60 லட்சம் முதிர்வு நன்மையைப் பெறுவார்.

மேலும் படிக்க | 7th pay commission: டிஏ உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News