தபால் அலுவலக சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: இனி இந்த வசதிகளும் கிடைக்கும்

Post Office Service: அஞ்சலகம் வாடிக்கையாளர்களுக்கு அளப்பரிய வசதிகளை செய்து தருகிறது. தற்போது அஞ்சலக சேவைகளை பயன்படுத்தும் பல பயனர்களுக்கான புதுப்பிப்பு ஒன்று உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2022, 11:13 AM IST
  • தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி.
  • வாடிக்கையாளர்கள் என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் வசதியைப் பெறுவார்கள்.
  • என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்புவது எளிது.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: இனி இந்த வசதிகளும் கிடைக்கும் title=

தபால் நிலைய சேவைகள்: நீங்களும் தபால் அலுவலக வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கான முக்கிய செய்தி உள்ளது. அஞ்சலகம் உங்களுக்கு அளப்பரிய வசதிகளை செய்து தருகிறது. தற்போது அஞ்சலக சேவைகளை பயன்படுத்தும் பல பயனர்களுக்கான புதுப்பிப்பு ஒன்று உள்ளது.

கடந்த மே 20 ஆம் தேதி முதல் தபால் நிலையத்தில் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இப்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதி பரிமாற்றத்தையும் செய்யலாம். என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய வசதிகள் அஞ்சல் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளதாக துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் என்இஎஃப்டி வசதியைப் பெறுவார்கள்

தபால் நிலையத்தில் என்இஎஃப்டி வசதி மே 18ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், ஆர்டிஜிஎஸ் வசதியும் மே 31ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தபால் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதாவது, இனி தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பும் வசதி கிடைக்கும். இதனுடன், மற்ற வங்கிகளைப் போலவே இது யூசர் ஃப்ரெண்ட்லி அதாவது பயனர்களுக்கு அனுகூலமாக மாறி வருகிறது. இது மட்டுமின்றி, இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு 24×7×365 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Crypto Scams: அதிகரிக்கும் கிரிப்டோ மோசடிகள்: மற்றுமொரு பொன்சி மோசடியில் சிக்காதீர்கள் 

என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்புவது எளிது

அனைத்து வங்கிகளும் என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் வசதிகளை வழங்குகின்றன. இப்போது தபால் நிலையமும் இந்த வசதியை வழங்குகிறது. என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்புவது மிகவும் எளிதாகிறது. இதன் மூலம் விரைவாக பணப் பரிமாற்றம் செய்யலாம். 

வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் நிதி பரிமாற்றம் செய்யலாம். இதற்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. என்இஎஃப்டி-இல் பணப் பரிமாற்றத்திற்கு வரம்பு இல்லை. எனினும், ஆர்டிஜிஎஸ்-இல் நீங்கள் ஒரு நேரத்தில் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும்.

இதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும்?

இந்த வசதிகளுக்கு வாடிக்கையாளர்கள் சில கட்டணங்களையும் செலுத்த வேண்டும். நீங்கள் என்இஎஃப்டி செய்தால், ரூ.10 ஆயிரம் வரை, ரூ.2.50 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரூ.5 + ஜிஎஸ்டி வரை செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை, ரூ.15 + ஜிஎஸ்டி மற்றும் 2 லட்சத்துக்கு மேல் ரூ.25 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Credit Card சமீபத்திய அப்டேட்: ஜூலை 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News