மிஸ் பண்ணிடாதீங்க.. FD திட்டத்தில் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கிகள், டபுள் வருமானம் பெறலாம்

இந்தியன் வங்கி, எஸ்பிஐ மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவை சிறப்பு எஃப்டியை இயக்குகின்றன, இதன் பலனை டிசம்பர் 31, 2023க்குள் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2023, 06:21 AM IST
  • இந்த திட்டங்களின் பலன்களை டிசம்பர் 31க்குள் பெறலாம்.
  • SBI வழங்கும் அதிக வட்டி விகிதம் கொண்ட ஸ்பெஷல் FD திட்டம் இதுவாகும்.
  • 400 நாட்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
மிஸ் பண்ணிடாதீங்க.. FD திட்டத்தில் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கிகள், டபுள் வருமானம் பெறலாம் title=

சிறப்பு FD திட்டங்கள்: முதலீடு மற்றும் சேமிப்புக்கு நிலையான வைப்புகளை சிறந்த தேர்வாக மக்கள் கருதுகின்றனர். இதில், சேமிப்புக் கணக்கை (Saving Account) விட அதிக வட்டி கிடைக்கும். வரி சேமிப்பு விருப்பமும் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் திறக்கும் மற்றும் திரும்பப் பெறும் செயல்முறையும் மிகவும் எளிதானது. இது ஒரு ஜீரோ ரிஸ்க் முதலீட்டுத் திட்டமாகும். வங்கிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பல வங்கிகள் சிறப்பு FD திட்டங்களையும் நடத்துகின்றன. இந்த திட்டங்களில், மற்ற கால திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி கிடைக்கும். பல நன்மைகளும் கிடைக்கும். தற்போது மூன்று வங்கிகள் சிறப்பு FD திட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த திட்டங்களின் பலன்களை டிசம்பர் 31க்குள் பெறலாம்.

எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டம்  (SBI Amrit Kalash Scheme):
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI “அம்ரித் கலாஷ் யோஜனா” என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்திய குடிமக்கள் மற்றும் NRI வாடிக்கையாளர்களுக்கான SBI-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமானது 400 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்டது SBI-யின் இந்த அம்ரித் கலாஷ் டெபாசிட் FD திட்டமானது பொது மக்களுக்கு 7.10 சதவீதம் வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60 சதவீதம் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மற்ற tenors-களுடன் ஒப்பிடுகையில் சீனியர் சிட்டிசன்கள் மற்றும் பொது மக்களுக்கு SBI வழங்கும் அதிக வட்டி விகிதம் கொண்ட ஸ்பெஷல் FD திட்டம் இதுவாகும். 

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி தேர்வு முடிவுகள்.. வெளியானது முக்கிய அப்டேட்: உடனே படிக்கவும்

400 நாட்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு திட்டம் முதலில் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்த திட்டத்தின் கடைசி தேதி ஆகஸ்ட் 15  என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது டிசம்பர் 31 வரை இந்த ஸ்பெஷல் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்பெஷல் FD திட்டம் ரூ.2 கோடிக்கு குறைவான என்ஆர்ஐ ரூபாய் டெர்ம் டெபாசிட்கள் உட்பட டொமஸ்டிக் ரீடெயில் டெர்ம் டெபாசிட்களுக்கு பொருந்தும். அம்ரித் கலாஷ் திட்டத்தின் வட்டியானது மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்தியன் வங்கி FD திட்டம்:
பொதுத்துறை இந்தியன் வங்கி தற்போது இரண்டு சிறப்பு FD திட்டங்களை நடத்தி வருகிறது, அவற்றின் பெயர்கள் “Ind Super 400″ மற்றும் Ind Supreme 300 Days”. இந்த திட்டத்தில் இணைய கால வரம்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தியன் வங்கி அதை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், திட்டத்தினால் பயன்பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு இந்தியன் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 

இதில் முதலில் இண்ட் சூப்பர் 400 திட்டத்தை பற்றி பேசுகையில், இந்த சிறப்பு நிலையான வைப்பு நிதித் திட்டமானது (FD) 400 நாள்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கக்கூடிய விருப்பங்களுடன் இருக்கிறது. 400 நாள்களுக்கு பணத்தை எடுக்காமல் வைப்புத் தொகையை பாதுகாக்க வேண்டும். அப்படி செய்யும் நேரத்தில் பொது முதலீட்டாளருக்கு 7.25 சதவீதம் விழுக்காடு வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத விழுக்காடு வட்டியும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு 8.00 சதவீத விழுக்காடு வட்டியும் வழங்கப்படுகிறது.

இண்ட் சுப்ரீம் 300 திட்டத்தை பற்றி பேசுகையில், இந்த சிறப்பு FD திட்டமானது 300 நாள்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கக்கூடிய விருப்பங்களுடன் இருக்கிறது. 300 நாள்களுக்கு பணத்தை எடுக்காமல் வைப்புத் தொகையை பாதுகாக்க வேண்டும். இதற்கு நிலையான 7.05 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 விழுக்காடு வட்டியும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு 0.75 விழுக்காடு கூடுதல் வட்டியும், வங்கி ஊழியர்களுக்கு 1 விழுக்காடு கூடுதல் வட்டியும், மூத்த குடிமக்கள் பட்டியலில் இருக்கும் வங்கி ஊழியருக்கு 1.50 விழுக்காடு வட்டி கூடுதலாகவும், மிகவும் மூத்த குடிமக்கள் பட்டியலில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு 1.75 விழுக்காடு கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது.

IDBI சிறப்பு FD திட்டம்:
ஐடிபிஐ வங்கியின் சிறப்பு FD திட்டத்தின் பெயர் “அம்ரித் மஹோத்சவ் FD திட்டம்”. 444 நாட்களுக்கு FDக்கு 7.65% வட்டி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் காலக்கெடுவை அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஐடிபிஐயின் அம்ரித் மஹோத்சவ் எஃப்டி" 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கு டிசம்பர் 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க | டிசம்பர் மாதம் தான் கடைசி! இந்த வேலைகளை மறக்காம முடிச்சுருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News