பிக் பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் கர்ஜித்த ஆரி- வெளியான காரணம்!

பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருக்காதீங்கன்னு சொன்னதற்கு சோம்பேறின்னு சொல்லாதீங்கன்னு அப்படி கத்தும் பாலாஜி முருகதாஸ், ஆரியை பார்த்து பேக்கு, அடி முட்டாள், வெளியே வந்தா பார்த்துக்குறேன், அடிச்சிடுவேன் என்று பேசியுள்ளார். இதை பலர் கண்டித்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2021, 10:40 AM IST
பிக் பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் கர்ஜித்த ஆரி- வெளியான காரணம்! title=

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது 90 நாட்கள் கடந்துள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா மற்றும் அனிதா என பத்து பேர் வெளியேறியுள்ளனர். 

இந்த பிக் பாஸ் (Bigg Boss Tamilசீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. அந்தவகையில் தற்போது ஆரியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆரி (Aari Arjuna) கார்டன் ஏரியாவில் கர்ஜித்து தனது ஸ்ட்ரெஸ்ஸை போக்கிக் கொண்டார்.

ALSO READ | பிக் பாஸ் 4 இல் மீண்டும் ஓபன் நாமினேஷன்- யார் யாருக்கு ஆப்பு?

இந்த வாரம் ஆங்கில புத்தாண்டு வாரம் ஜெயில் கிடையாது என பிக் பாஸ் சொல்லி இருந்தால், பிரச்சனையே வெடித்து இருக்காது. பாலா கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டும் போதும், திருப்பி திட்டாமல் தான் சொன்ன சோம்பேறித்தனம் என்கிற வார்த்தைக்கும் மன்னிப்பு கேட்ட ஆரியின் மனதை பார்த்துத் தான் இத்தனை ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருக்காதீங்கன்னு சொன்னதற்கு சோம்பேறின்னு சொல்லாதீங்கன்னு அப்படி கத்தும் பாலாஜி முருகதாஸ் (Balaji Murugadoss), ஆரியை பார்த்து பேக்கு, அடி முட்டாள், வெளியே வந்தா பார்த்துக்குறேன், அடிச்சிடுவேன் என்று பேசியுள்ளார். இதை பலர் கண்டித்துள்ளனர். 

ALSO READ | பிக் பாஸ் சோம் சேகரின் செல்ல நாய் திடீர் மரணம்! வீடியோ!

ஒவ்வொரு முறையும் ஹவுஸ்மேட்கள் தன்னை ஒதுக்கி வைத்த வலி, தனது குழந்தையையும் மனைவியையும் பார்த்த சந்தோஷத்தை அடுத்த நொடியே மறக்கடிக்க வைத்த நயவஞ்சகம் அத்தனை குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எதிர்வினை ஆற்றாமல் இருந்து கடைசியில் கார்டன் ஏரியாவில் கர்ஜித்த ஆரியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News