நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய படம்! பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும், நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 7, 2024, 01:32 PM IST
  • நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய படம்.
  • கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியுள்ளது.
  • ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய படம்! பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு! title=

தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா. அந்த வகையில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த திரைப்படம் காமெடி, ஃபேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் ஐந்து படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள துரை. சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். 

மேலும் படிக்க | Latest News Samantha Ruth Prabhu Instagram Story : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா!? ரசிகர்கள் அதிர்ச்சி.. 

படம் குறித்து தயாரிப்பாளர் நஞ்சுண்டப்பா ரெட்டி கூறுகையில், “ஓசூரில் பிசினஸ் செய்து வரும் நாங்கள் முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் என்ற கம்பெனி தொடங்கி தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ளோம். கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். இவர் ‘நிழல்’ உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். புதுமுக நடிகராக சந்தோஷ் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ்,  இயக்குநர் ஏ. வெங்கடேஷ் மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். உங்களுடைய முழு ஆதரவு படத்திற்கு தர வேண்டும்” என்றார். 

தொழில்நுட்பக் குழுவினர்:

இயக்குநர்: துரை. சரவணன்,
தயாரிப்பு பேனர்: ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், 
தயாரிப்பாளர்கள்: நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ்,
ஒளிப்பதிவு: எஸ்.ஆர். சதீஷ் குமார் (பேராண்மை, மீகாமன்),
எடிட்டர்: விஜய் வேலுக்குட்டி (வலிமை, துணிவு, மார்க் ஆண்டனி),
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த்தேவா

மேலும் படிக்க | Bison Kaalamaadan Movie: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News