பிரபல இளம் நடிகருடன் காதலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி?

அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.    

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2023, 10:08 AM IST
  • ஐஸ்வர்யா லக்ஷ்மி சமீபத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
  • கட்ட குஸ்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • அர்ஜுன் தாஸ் உடன் எடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
பிரபல இளம் நடிகருடன் காதலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி? title=

சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது பிரபலமாகி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி.  நடிகை மற்றும் தயாரிப்பாளரான இவர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்', 'கேப்டன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.  சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார் மற்றும் இப்படத்தை அவரே தயாரித்து இருந்தார்.  மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்-1' படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் இவர் பலரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.  கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான 'கட்டா குஸ்தி' படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பலரையும் குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

மேலும் படிக்க | ஆஸ்கரில் வரலாறு படைத்த 'நாட்டு நாட்டு' பாடல்!

செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்திருந்தார்.  ஒரு மல்யுத்த வீராங்கனை தனது குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் ஒரு ஆணாதிக்கவாதியை திருமணம் செய்துகொண்டு, பல விமர்சனங்களை எதிர்கொண்டு இறுதியில் தனது கனவை நிறைவேற்றினாரா? கணவனின் மனதை மாற்றினாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.  பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார், இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாகவுள்ளது.  ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் இந்த நடிகை தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற சில படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திற்குள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  இந்த புகைப்படத்துடன் அவர் ஒரு இதய எமோஜியையும் கேப்ஷனாக சேர்த்து பதிவிட்டு இருக்கிறார்.  இதனை பார்த்ததிலிருந்து ரசிகர்கள் பலரும் இவர் உண்மையாகவே அர்ஜுன் தாஸுடன் உறவில் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் புதிய படத்திற்கான ப்ரோமோஷனா என்று பலவிதனாக யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வர, கோலிவுட் வட்டாரத்தின் அடுத்த ஜோடி அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லக்ஷ்மி தானா என்று இணையதள பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | கோல்டன் குளோப் விருதை வென்றது RRR - சரித்திரம் படைத்த நாட்டு குத்து பாடல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News