அடுத்த படம் எப்போ? அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னையில்  ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த மார்வெலஸ் மார்கழி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 2, 2023, 05:29 PM IST
  • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத்.
  • அனிருத், மார்வெல்ஸ் மார்கழி திருவிழாவில் கலந்து கொண்டார்.
  • இவர், தனது அடுத்த படம் எப்போது என்பது குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.
அடுத்த படம் எப்போ? அப்டேட் கொடுத்த அனிருத்! title=

மீனம்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மார்வெலஸ் மார்கழி திருவிழா எனும் நிகழ்ச்சியில் பாடல்,நடனம் மற்றும் இசையில் பிரபலமான  கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு  தங்கள் தனித்துவத்தை நிரூபிக்கும் விதமாக ராம்ப் வாக் செய்து அசத்தினர். சென்னையின் கலாச்சாரத்தை பிதிபலிக்கும் இந்த மார்கழி திருவிழா  ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இந்த விழாவில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார். அப்போது, தன் அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் தெரிவித்திருந்தார். 

பாடகர்கள் அருணா சாய்ராம், ரஞ்சனி காயத்ரி, சுதா ரகுநாதன், பிரியா சகோதரிகள், உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன், சிக்கில் குருசரண், சந்தீப் நாராயண், ராதே ரித்விக் ராஜா ஆகியோர் ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர். 

Article

நடிகை வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், காயத்ரி, மஹதி, ஷோபனா, ஊர்மிளா சத்தியநாராயணன், மீனாக்ஷி சித்தரஞ்சன், உமா முரளி கிருஷ்ணா, பிரியதர்ஷினி கோவிந்த், ஶ்ரீகலா பரத், கோபிகா வர்மா ஆகிய கலைஞர்களின் அசத்தல் நடை அரங்கை அசத்தியது. 

மேலும் படிக்க | சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! சில்க்-ஆக நடிக்கும் ஹீரோயின் யார்?

இன்னொரு சிறப்பாக லால்குடி ஜி ஜே ஆர் கிருஷ்ணன், விஜி வயலின் கணேஷ், குமரேஷ் ஷசங்க், ஶ்ரீஷா ஜெயந்தி குமரேஷ், கண்ணன், மாண்டலின் ராஜேஷ், அணில் சீனிவாசன் ஆனந்தா, சாருமதி விஜி கிருஷ்ணன்  ஆகியோரின் ராம்ப் வாக் அரங்கை அழகூட்டியது.  

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத் செய்தியாளர்களிடம் பேசுகையில் " மார்கழி சீசன் போன்ற இசை நிகழ்ச்சிகளை சிறு வயதில் இருந்தே பார்த்துதான் வளர்த்திருக்கிறேன். தொடர்ந்து 3 மாதங்களாக நிறைய படங்களுக்கு இசையமைத்ததால் வரும் இரண்டு மாதங்களுக்கு ஒய்வு தான் அதன் பின்பு நிறைய படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரும் "என தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்த வருடம் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள்! முதலிடத்தில் இருப்பது யார் படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News