லியோ படத்தில் நான் இருக்கேனா? அர்ஜுன் தாஸ் சொன்ன பதில்!

அநீதி படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் அர்ஜூன்தாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2023, 07:59 AM IST
  • ரசிகர்களை கவர்ந்துள்ள அநீதி படம்.
  • கோவையில் அர்ஜுன் தாஸ் பேட்டி.
  • மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிப்பேன்.
லியோ படத்தில் நான் இருக்கேனா? அர்ஜுன் தாஸ் சொன்ன பதில்! title=

வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது நடிகை துஷாரா விஜயனுடன் நடித்த அநீதி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட் வே சினிமாஸ் தியேட்டருக்கு வந்த அநீதி பட நாயகன் அர்ஜூன் தாஸ், நாயகி துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ், அநீதி படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று  திரையரங்குகளில் நல்ல வசூல் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.  வசந்தபாலன் இயக்கம், இயக்குனர் சங்கர் தயாரிப்பு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை தாம் எதிர்பார்த்த தாக கூறினார்.

மேலும் படிக்க | பேய் பட பிரியரா நீங்கள்? தைரியம் இருந்தால் இந்த 5 படங்களை இரவில் தனியாக பாருங்கள்..!

குறிப்பாக உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறிய அவர், புதிய பரிணாமத்தில் மாறுதலான கதாபாத்திரத்தில் தோன்றியது மகிழ்ச்சியே என கூறி, மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும்  நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அநீதி படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் தாஸிடம் நீங்கள் லியோ படத்தில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, தற்போது பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், சமீபத்தில் சஞ்சய் தத் பிறந்தநாளுக்கு லியோ படக்குழு வெளியிட்டு இருந்த வீடியோவிற்கு அர்ஜுன் தாஸ் பயர் எமோஜியை பதிவிட்டு இருந்தார்.  இது தற்போது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.  

கைதி படத்தின் தொடர்ச்சியான விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து இருந்தார்.  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.  LCUல் இந்த படம் வருமா வராதா என்று ரசிகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில், படக்குழு இன்னும் இது குறித்து விளக்கம் கொடுக்கவில்லை. லியோ படம் சம்பந்தமான அனைத்தையும் படக்குழு மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறது.

மேலும் படிக்க | ‘எதிர்நீச்சல்’ தாெடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்..? இதோ முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News